ரகசியமாக நடந்த பூர்ணாவின் திருமணம்.. வெளியான வைரல் புகைப்படங்கள்

முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆனவர் நடிகை பூர்ணா. இவருடைய நிஜப்பெயர் ஷாம்னா கசீம். இவர் தமிழைத் தவிர தெலுங்கு, மலையாள மொழி படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கென்று தனி ரசிகர் கூட்டமே இருந்தது.

தமிழில் கொடைக்கானல், வேலூர் மாவட்டம், ஆடுபுலி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் பூரணா ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த ஆசிப் அலி என்பவர் உடன் பூர்ணா பல ஆண்டுகள் நட்பாக பழகி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த மே மாதம் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது.

Also Read :ரொம்ப ஓவரா போறீங்க ஆன்ட்டி.. தேவையில்லாமல் சீன் போட்டு கடுப்பேற்றிய பூர்ணா

இடையில் இவர்கள் இருவரும் பிரிந்து விட்டதாக இணையத்தில் நிறைய வதந்தி வந்தது. இதனால் தான் பூர்ணாவின் திருமணம் தடைபட்டுள்ளது என்று கூறப்பட்ட நிலையில் பூர்ணா இதற்கு எந்த பதிலும் கூறாமல் இருந்தார். இந்நிலையில் கடந்த ஜூன் 12-ஆம் தேதியே எங்களுக்கு துபாயில் திருமணம் நடந்த முடிந்ததாக பூர்ணா புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

மணப்பெண் அலங்காரத்தில் பூர்ணா

poorna

மேலும் துபாயில் உள்ள நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் எங்கள் திருமணம் நடந்ததாகவும் விசா பிரச்சினை காரணமாக பல பிரபலங்கள் எங்களது திருமணத்தில் கலந்து கொள்ள முடியவில்லை என பூர்ணா பதிவிட்டுள்ளார். மேலும் தற்போது தனது கணவருடன் பூர்ணா துபாயில் வசித்து வருகிறார்.

கணவருடன் உற்சாகத்தில் பூர்ணா

poorna-marriage-photo

Also Read :நிர்வாணமாக நடிக்க சொன்ன இயக்குனர்.. பூர்ணாவை பார்த்து மற்ற நடிகைகள் கத்துக்கோங்க

மேலும் அங்கு ஒரு நடன பள்ளி ஆரம்பிக்க வேண்டும் என்பது தனது ஆசை என்று பூர்ணா கூறி இருக்கிறார். இந்நிலையில் தற்போது பூர்ணாவின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இவ்வளவு ரகசியமாக ஜூன் மாதமே திருமணத்தை பூர்ணா முடித்தது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கணவருடன் பூர்ணா

poorna-marriage-photo

குடும்பத்துடன் கொண்டாட்டத்தில் பூர்ணா

poorna-marriage-photo

Also Read :குலுங்கி குலுங்கி ஆட்டம் போட்ட பூர்ணா.. சூர்யா பட நடிகையால் ஆடிப்போன இளசுகள்!