பெட்ரூம் புகைப்படம் வெளியிட்டு அலறவிட்ட பூஜா ஹெக்டே.. பீஸ்ட் நடிகையின் அலும்பு தாங்கல!

முகமூடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாததால் பூஜா ஹெக்டே தெலுங்கு மற்றும் ஹிந்தி திரையுலகில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

தெலுங்கில் இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் மாபெரும் வெற்றி பெற்றதையடுத்து தெலுங்கிலேயே குடியேறிவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும் அந்த அளவிற்கு அவருக்கு அடுக்கடுக்கான பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

சமீபத்தில் கூட அல்லு அர்ஜுன் நடிப்பில் தமிழில் டப் செய்து வெளியான அல வைகுந்தபுரமுலோ திரைப்படம் தமிழ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. மேலும் இப்படத்தில் இடம்பெற்ற புட்ட பொம்மா புட்ட பொம்மா என்னும் பாடல் பட்டி தொட்டி எங்கும் வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.

pooja hegde
pooja hegde

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகும் பீஸ்ட் படத்தில் பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட்லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. நாளுக்கு நாள் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

தற்போது பூஜா ஹெக்டே அவரது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் பார்க்கப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்