நடிகைகள் என்றாலே ரசிகர்கள் கூட்டம் அலை மோதும் அதே போல் பூஜா ஹெக்டே நடிகைக்கு  தமிழில் ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் தற்பொழுது ரொம்ப பிஸியாக நடித்து வருகிறார்.

ஜீவா நடித்த முகமூடி என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. தமிழை விட தெலுங்கு மற்றும் ஹிந்தியில் இவர் தொடர்ந்து நிறைய படங்கள் நடித்து வருகிறார்.

தற்போது பிரபலமான நாயகியாக வலம் வரும் இவர் தனது கனவு காரை வாங்கியுள்ளாராம். இந்த தகவலை அவரே தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

ஒரு கனவு கார் வாங்கும்போது உண்டாகும் மகிழ்ச்சியை உணர்ந்திருக்கிறீர்களா. எனது உடலில் ரத்தம், எலும்புகள், செல்கள் எல்லாம் கொஞ்சம்தான் இருக்கின்றன. நன்றியுணர்வு தான் பெரிய மூட்டையாக நிரம்பியிருக்கிறது எனக் குறிப்பிட்டிருக்கிறார்.