Tamil Cinema News | சினிமா செய்திகள்
தமிழில் அதிகரிக்கும் கில்மா படங்கள்.! கொந்தளிக்கும் பொன்வண்ணன்.!
கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகி இருக்கும் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை ரசிகர்கள் புறக்கணிக்க வேண்டும் என நடிகர் சங்கத் துணைத்தலைவர் பொன்வண்ணன் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் சந்தோஷ் பி. ஜெயக்குமார் கோலிவுட்டில் ஹர ஹர மகாதேவி படத்தின் மூலம் அறிமுகமானர். அடல்ட் காமெடிகளுக்கு பெயர் போன இந்த தலைப்பே படத்தின் தரத்தை சொன்னது. படமும் அடல்ட் மட்டுமே பார்க்க கூடிய அளவில் இருந்ததால் படத்திற்கு சரியான வரவேற்பு கிடைக்கவில்லை. இதை தொடர்ந்து, அப்படத்தின் நாயகனாக கௌதம் கார்த்திக்கை வைத்து இயக்கி இருக்கும் இரண்டாவது படம் இருட்டு அறையில் முரட்டு குத்து. வைபவி ஷாண்டில்யா, யாஷிகா ஆனந்த், சந்திரிகா ரவி என படத்தில் மூன்று நாயகிகள் நடித்துள்ளனர். ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா படத்தை இயக்குகிறார்.
படத்தினை நாளை (மே 4) வெளியிட இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது. படத்தின் முன்னோட்ட காட்சிகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதை பார்த்த பல ரசிகர்கள் இதிலே இப்படினா படம் எத்தனை மோசமாக இருக்கும் என கலாய்க்க தொடங்கி இருக்கிறார்கள்.
இதை தொடர்ந்து, இப்படம் குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய இயக்குனர் சந்தோஷ், உலக சினிமாவின் எல்லா இடத்திலும் இந்த வகை சினிமாக்கள் எடுக்கப்பட்டு வருகிறது, ஆனால் தமிழில் இல்லை. பொழுதுகோக்காக மட்டும் பாருங்கள் எனத் தெரிவித்து விட்டார். ரசிகர்கள் பலர் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகரும், நடிகர் சங்க துணைத் தலைவருமான பொன்வண்ணன் தனது எதிர்ப்பை இப்படத்திற்கு மறைமுகமாக தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவில், “பட முன்னோட்டம்“ காறி துப்பவைக்கிறது.. இது போன்ற படங்கள் எடுத்து சம்பாதிப்பதை விட திரைத்துறையை நிரந்தரமாக இழுத்து மூடலாம்…. எனக் குறிப்பிட்டு இருந்தார். இது சமீபத்தில் வெளியிடப்பட்ட இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் முன்னோட்டம் தான் இணையவாசிகள் அப்பட்டமாக அறிந்து கொண்டனர்.
தொடர்ந்து, பதிவிட்ட அவர், அழகாக கதைசொல்லி, திரையை இலக்கியமாக்கும் பல இயக்குனர்களின் வாழ்க்கையையே, இது போன்ற படங்கள் தடம் மாற்றலாம்..! புறக்கணியுங்கள்… எனக் கோரிக்கை விடுத்து இருந்தார். ஒரு கலைஞனாக இவரின் ஆதங்கம் சரி தான் என அவர் பதிவுக்கு பின்னுட்டங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே பாடல்கள் ரசிக்க முடியாமல் சென்று கொண்டு இருக்கும் கோலிவுட்டின், பட தேர்வும் தொடர்ந்து இப்படி அமைந்தால் ரசிகர்கள் இழக்கவும் நேரிடலாம்.
சந்தோஷ பி ஜெயக்குமார் அடுத்து ஆர்யாவை வைத்து கஜினிகாந்த் படத்தை இயக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
