பொன்னியின் செல்வன் ஹிட் ஆகியும் பிரயோஜனம் இல்ல.. ஒரே படத்தால் டல்லான ஜெயம் ரவியின் 3 படத்தின் பிஸினஸ்

நடிகர்கள் சிலர் பிரம்மாண்டமான படங்களில் நடிக்க வேண்டும் என ஆசைப்படுவார்கள். அதிலும் மார்கெட்டில்லா நடிகர்களுக்கு அப்படிப்பட்ட வாய்ப்பு கிடைத்தால் அதை வைத்து சினிமாவில் மேலே ஏறிவிடலாம் என கனவு காண்பர். இந்த விஷயம் எல்லா நடிகர்களுக்கும் செட்டாகாது, சில நடிகர்கள் பெரிய கதாபாத்திரங்கள்,பெரிய படங்களில் நடித்தாலும் மார்க்கெட் இல்லாமல் திணறுவர்.

அந்த வகையில் , இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் பாகம் 1, படம் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு மாபெரும் ஹிட்டானது. பான் இந்தியா திரைப்படமாக ரிலீசான இப்படத்தில் விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, பார்த்திபன், சரத்குமார், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். எழுத்தாளர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்ட இப்படத்தில் சோழர்களின் வாழ்வியல் தத்ரூபமாய் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.

Also Read: பொன்னியின் செல்வனுக்காக கெஞ்சி கூத்தாடிய மணிரத்னம்.. எல்லாத்துக்கும் வழிவிட்டு ஓகே சொன்ன தலைவர்

இதனிடையே சோழர் காலத்து மன்னனான அருள்மொழிவர்மன் என்கிற பொன்னியின் செல்வன் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி நடித்திருப்பார். ஜெயம்ரவியின் நடிப்பு வித்தியாசமாய் அமைந்த நிலையில், இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் உருவானது. மேலும் இப்படம் மூலமாக இவரது சம்பளமும் பல மடங்கு உயர்த்தப்பட்டது. இருந்தாலும் இவர் தனியாக நடித்த படங்கள் கடந்த ஒரு வருடங்களாக ரிலீசாகாமல் உள்ளது.

இதற்கான காரணம் ஜெயம் ரவியின் 25வது படமாக வெளியான பூமி படத்தின் தோல்வி தான், இப்போது வரை இவரது படங்களுக்கு பிஸ்னஸ் ஆகாவிடாமல் தடுத்து வருகிறது. பூமி படம் விவசாயம், விஞ்ஞானம் கலந்த கதைக்களத்தோடு இயக்குனர் லக்ஷ்மணன் இயக்கியிருந்தாலும் படத்தின் கதை சுவாரசியமாக அமையாமல் போனது.

Also Read:  2ம் பாகம் தான் எங்களுக்கு ஒரே வழி.. அருள்நிதி முதல் ஜெயம் ரவி வரை தவம் கிடக்கும் 5 ஹீரோக்களின் படங்கள்

தற்போது ஜெயம்ரவி நடிப்பில் மீண்டும் பொன்னியின் செல்வன் பாகம் 2 திரைப்படம், வரும் ஏப்ரலில் ரிலீசாக உள்ள நிலையில், இந்த படத்தையடுத்து இறைவன், சைரன், அகிலன் உள்ளிட்ட படங்கள் ஜெயம் ரவி வசம் உள்ளது. தற்போது இந்த இரண்டு படங்களுமே பிஸ்னஸ் ஆகாமல் உள்ளதால், தற்போது ஜெயம் ரவி என்ன செய்வதென்றே தெரியாமல் முழித்து வருகிறாராம்.

இப்படியே போனால் கண்டிப்பாக ஜெயம் ரவியின் மார்க்கெட் சரிந்து மீண்டும் சினிமாவை விட்டே ஜெயம் ரவி காணாமல் போக வாய்ப்பு இருப்பதாக இவரது நெருங்கிய வட்டாரங்கள் கூறி வருகின்றனர். இறைவன், அகிலன், சைரன் உள்ளிட்ட மூன்று படங்களில் ஏதேனும் ஒரு படமாவது வெளியாகி ஹிட்டானால் மட்டுமே ஜெயம்ரவிக்கு பொன்னியின் செல்வன் படத்தால் கிடைத்த வெற்றியை மனதார அனுபவிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read:பொன்னியின் செல்வன் 2 ரிலீசுக்கு வரும் பெரும் சிக்கல்.. படாதபாடு படும் ஜெயம் ரவி, விக்ரம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்