Connect with us
Cinemapettai

Cinemapettai

பொன்னியின் செல்வன் படத்தில் இணைந்த பிரபல வில்லன் நடிகர்!

ponniyin-selvan

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பொன்னியின் செல்வன் படத்தில் இணைந்த பிரபல வில்லன் நடிகர்!

தமிழ் இலக்கியத்தில் பெரிதும் போற்றப்படும் நாவல்களில் முக்கியமானது பொன்னியின் செல்வன். கல்கி எழுதிய இந்த நாவல் 1950 – 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. கி.பி. 1000 ஆம் ஆண்டு வாக்கில் இருந்த ராஜராஜ சோழன் அரசானி ஆட்சியமைப்பதை அடிப்படையாகக் கொண்டு இந்த வரலாற்றுப் நாவல் எழுதப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படமாக உருவாகவுள்ளது. இயக்குநர் மணிரத்னம் இயக்கவிருக்கும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் இந்திய சினிமாவின் பல்வேறு பிரபலங்கள் பலரும் நடிக்கின்றனர்.

இதில் ஐஸ்வர்யா ராய் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். ராஜராஜ சோழனின் அமைச்சரவையில் இருந்த முக்கிய மந்திரிகளில் ஒருவர் பெரிய பழுவேட்டறையர். அவரது மனைவியான நந்தினி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்க உள்ளாராம்.

ஐஸ்வர்யா ராய் தவிர, நடிகர்கள் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, பார்த்திபன், ஜெயராம் உள்ளிட்ட பலரும் ‘பொன்னியின் செல்வன்’ கதையில் முக்கிய வேடங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளனர். இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் பிரபல மலையாள நடிகர் லால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் விஷால் நடித்த’சண்டக்கோழி’உள்பட பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

லைகா நிறுவனம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்க உள்ளன. பொன்னியின் செல்வன் படக்குழு தற்போது ஷூட்டிங்கிற்கு தயாராகி வருகிறது. வரும் டிசம்பர் 12ம் தேதி இப்படத்தின் ஷூட்டிங் தாய்லாந்து நாட்டில் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும், முதற்கட்டமாக தொடங்கவிருக்கும் இந்த ஷூட்டிங் பணிகள் தொடர்ச்சியாக 40 நாட்கள் நடைபெறும் என்றும், ஷூட்டிங் தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக படக்குழுவினர் தாய்லாந்து செல்ல உள்ளார்களாம்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top