Tamil Cinema News | சினிமா செய்திகள்
பாகுபலியை தூக்கி சாப்பிட்ட பொன்னியன் செல்வன் படத்தின் பட்ஜெட்.. குருவி தலையில பாம் வச்சுட்டாங்களோ
இயக்குனர் மணிரத்னம் தற்போது பொன்னியின் செல்வன் என்ற நூலை தழுவி சரித்திர படம் ஒன்றை இயக்கி வருகிறார். பெரும் பொருட்செலவில் தயாராகும் இந்தப் படத்தில் தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆகிய துறைகளில் நடிக்கும் முக்கிய நடிகர்கள் இணைந்து நடித்து வருகின்றனர். ஐந்து மொழிகளில் உருவாகிவரும் இந்த திரைப்படம் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் வெளிவரவுள்ளது.
இந்த படத்தில் ஆதித்ய கரிகாலனாக விக்ரம், ராஜராஜ சோழனாக ஜெயம் ரவி, வந்திய தேவனாக கார்த்தி, பழுவேட்டரையராக சரத்குமார், சுந்தரசோழனாக அமிதாப்பச்சன் ஆகியோரும் நடிக்கின்றனர். இவர்களைத் தொடர்ந்து விக்ரம் பிரபு, திரிஷா, நிழல்கள் ரவி, பார்த்திபன், ஜெயராம், ரகுமான், ஐஸ்வர்யா ராய் போன்றோரும் நடிக்கின்றனர்.
சுமார் 800 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இரண்டு பாகமாக தயாராகி வருகிறது. உண்மையை சொல்ல வேண்டுமானால் பாகுபலியை விட அதிகமான பட்ஜெட் தான். 5 மணி நேரம் ஓடக்கூடிய திரைப்படத்தை இரண்டு பாகமாக பிரித்து வழங்க இருக்கிறார்கள்.
பாகுபலி படத்தில் ராஜமௌலி காட்சிக்கு காட்சி சுவாரஸ்யம் கூட்டி அனைத்து ரசிகர்களையும் ரசிக்க வைத்தார். ஆனால் மணிரத்னம் படம் எப்படி இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஒரு குறிப்பிட்ட சிலரால் மட்டுமே அவரது படங்களை ரசிக்க முடியும்.
இருந்தும் எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ யாருக்குத் தெரியும் என்பதைப் போல திடீரென மிரட்டலான படம் மணிரத்தினம் கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. தாய்லாந்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது சென்னையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக அரங்கம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மிரட்டலான மணிரத்னம் சார பார்க்க போறோமே! ஜாலி
