fbpx
Connect with us

Cinemapettai

‘பொன்னியின் செல்வன்’ படத்தில் யார் யார்? அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Tamil Cinema News | சினிமா செய்திகள்

‘பொன்னியின் செல்வன்’ படத்தில் யார் யார்? அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மணிரத்னம் இயக்கப்போகும் அவரது கனவுப்படமான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் இணைந்துள்ளவர்கள் யார் யார் என்பது குறித்து அதிகாரபூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்திய சினிமா உலகின் ஜாம்பவான்களில் ஒருவான மணிரத்னம் தனது கனவுப்படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தை படமாக்கும் முயற்சியை ஆரம்பித்துள்ளார்.

இந்தியத் திரையுலகின் பல்வேறு முன்னணி நடிகர்கள் நடிக்க்கிறார்கள். இந்த படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பதை முதன்முறையாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

‘பொன்னியின் செல்வன்’ படத்தில் விக்ரம், கார்த்தி, ‘ஜெயம்’ ரவி, விக்ரம் பிரபு, ரகுமான், ஐஸ்வர்யா ராய் பச்சன், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பிரபு, ஜெயராம், அஸ்வின், கிஷோர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். லைகா நிறுவனம் மற்றும் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கின்றன.

முதற்கட்ட படிப்பிடிப்பு டிசம்பர் 10-ம் தேதி தாய்லாந்தில் உள்ள பாங்காக்கில் தொடங்குகிறது. இதில் கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளது. ஒரு மாதம் படப்பிடிப்பு நடிக்க போகிறதாம்.

இந்தப் படத்தின் திரைக்கதையை மணிரத்னத்துடன் இணைந்து குமரவேலு உருவாக்கி உள்ளார். எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுதி உள்ளார். இசை ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவு ரவிவர்மன், சண்டைக் காட்சி ஷாம் கெளஷல், எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத், ஆடை வடிவமைப்பாளர் ஏகா லக்கானி, மேக்கப் கலைஞர் விக்ரம் கைக்வாத், நடனம் பிருந்தா ஆகியோர் பணியாற்ற உள்ளார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top