fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

8 வருடங்களுக்கு முன்பே 300 கோடி பட்ஜெட்டில் விஜய் நடிக்க இருந்த படம்.. திடீரென டிராப் ஆக காரணம் என்ன?

vijay-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

8 வருடங்களுக்கு முன்பே 300 கோடி பட்ஜெட்டில் விஜய் நடிக்க இருந்த படம்.. திடீரென டிராப் ஆக காரணம் என்ன?

தமிழ் சினிமாவின் தலைசிறந்த இயக்குனர்களில் மணிரத்தினம் முக்கியமான இடத்தில உள்ளார். இயக்கம், ஒளிப்பதிவு, தயாரிப்பு என பல முகங்களைக் கொண்டவர்.

மணிரத்தினம் ரசிகர் மனதில் எப்படி தத்திருவமாக நிறுத்துவரோ, அதேபோல் தத்ரூபமாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் சுஹாசினி. சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் 2012 ஆம் ஆண்டு, 300 கோடி பட்ஜெட்டில் ‘பொன்னியின் செல்வன்’ படம் எடுக்கப் பட இருந்ததாம்.

அப்போது சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு மற்றும் தளபதியை வைத்து இந்த படம் எடுக்கலாம் என்று ஒப்பந்தம் ஆகி விட்டதாம். ஆனால் VFX மற்றும் அனிமேஷன் போன்ற டெக்னாலஜிகள் அந்த அளவு சிறப்பாக இல்லாததால், அந்த நேரத்தில் படம் கைவிடப்பட்டதாக அந்த பேட்டியில் தெளிவுபடுத்தியுள்ளார் சுஹாசினி.

மணிரத்தினம் தளபதி விஜய்யை முக்கியமான கதாபாத்திரமான அருள்மொழி வர்மன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க ஆசைப்பட்டாராம். தற்போது மணிரத்தினத்தின் கனவு படமான ‘பொன்னியின் செல்வன்’ உருவாகிக் கொண்டிருக்கின்றது.

மணிரத்தினம் இயக்கத்தில் மிகப்பிரமாண்டமாக உருவாக்கப்பட உள்ளது. இந்த படத்தில் தற்போது விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய் பச்சன், திரிஷா, அதிதி ராவ், விக்ரம்பிரபு போன்ற பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார், பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்க இருக்கும் பொன்னியின் செல்வன் படத்திற்காக நடிகர்கள் தங்களது உடல் அமைப்பை கட்டுக்கோப்பாக மெருகேற்றி வருகின்றனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தாய்லாந்தில் தொடங்கப்பட்டது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பிப்ரவரி 2020 ஆம் ஆண்டு புதுச்சேரியில் 6 நாட்கள் நடைபெற்றது. அதற்கு பின்னர் தற்போது கொரோனாவின் பாதிப்பு இருப்பதால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top