Connect with us
Cinemapettai

Cinemapettai

ponniyin-selvan-aiswarya-rai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மகாராணியாக ஐஸ்வர்யா ராய்.. இணையத்தில் கசிந்த பொன்னியின் செல்வன் பட புகைப்படம்

மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். கடந்த ஒரு வருட காலமாக மொத்த படப்பிடிப்பும் தடைபட்டது.

இந்நிலையில் மீண்டும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. ஹைதராபாத்தில் ஒரு பெரிய செட் போட்டு பொன்னியின் செல்வன் பட வேலைகள் ஆரம்பமாகியுள்ளன.

ஹைதராபாத்தில் எடுக்கப்பட்ட இந்த காட்சிகளில் முக்கிய நடிகர்களான ஐஸ்வர்யா ராய், கார்த்திக், ஜெயம் ரவி போன்றோர் நடித்தனர்.

எவ்வளவு வேகமாக பொன்னியின் செல்வன் படத்தை முடித்துக் கொடுக்க முடியுமோ, அவ்வளவு வேகத்தில் முடிக்க நடிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். இடையில் கொரானா ஒரு காட்டு காட்டாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என தினமும் சாமியை வேண்டிக் கொள்கிறார்களாம்.

பொன்னியின் செல்வன் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகி வருவதால் படத்தை பற்றிய எந்த ஒரு ரகசியமும் கசிந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறது படக்குழு. முக்கியமாக நடிகர் நடிகைகள் போட்டிருக்கும் கெட்டப்.

ஆனால் பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யாராய் நடிக்கும் கதாபாத்திரத்தின் கெட்டப் மற்றும் புகைப்படம் இணையத்தில் கசிந்து படக்குழுவினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யாராய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்பதும் கூடுதல் தகவல்.

aiswarya-rai-at-ponniyin-selvan

Aishwarya-rai-at-ponniyin-selvan

Continue Reading
To Top