சனிக்கிழமை, பிப்ரவரி 15, 2025

பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதால் எகுறிய பொன்னியின் செல்வன், காந்தாரா மார்க்கெட்.. ஊத்தி மூடப்பட்ட பிரின்ஸ்

மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் திரைப்படம் வரலாறு காணாத அளவிற்கு வரவேற்பை பெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த மாதம் வெளியான இந்த திரைப்படம் தற்போது ஒரு மாதம் ஆகியும் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படத்திற்குப் பிறகு பல திரைப்படங்கள் வெளிவந்த போதிலும் பொன்னியின் செல்வனுக்கான ஆதரவு மட்டும் குறையவில்லை.

அது மட்டுமல்லாமல் இதுவரை வெளியான தமிழ் திரைப்படங்களிலேயே அதிக வசூலை பெற்ற திரைப்படம் என்ற பெருமையையும் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. அதேபோன்று பொன்னியின் செல்வன் வெளியான தினத்திலேயே வெளிவந்த கன்னட திரைப்படமான காந்தாரா படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

Also read : காந்தாரா ஹீரோக்கு போன் போட்ட ரஜினி.. வாய்ப்பை வைத்து பக்காவாக ஸ்கெட்ச் போட்ட இயக்குனர்

ரிஷப் செட்டி இயக்கி நடித்து இருக்கும் அந்த திரைப்படம் தற்போது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதீயாகவும் இந்த படம் பட்டையை கிளப்பி கொண்டிருக்கிறது. மேலும் இந்த படத்தை பார்க்க தமிழ் ரசிகர்களும் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாட்டில் இந்த படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.

அதனால் இந்த இரண்டு திரைப்படங்களுக்கும் இப்போது அதிகபட்ச தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே பல தியேட்டர்களில் இன்னும் ஓடிக் கொண்டிருக்கும் இந்த படங்களுக்கு மேலும் பல தியேட்டர்களும், காட்சிகளும் அதிகரித்துள்ளது. அந்த வரிசையில் இந்த இரண்டு திரைப்படங்களும் மற்ற படங்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி முன்னிலை வகித்து வருகிறது.

Also read : மீண்டும் பொன்னியின் செல்வனை சீண்டி பார்க்கும் காந்தாரா.. எதிர்பார்ப்பை கிளப்பிய அடுத்த கட்ட மோதல்

இதில் பரிதாபகரமான நிலைக்கு சென்றது சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படம் தான். மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இந்த திரைப்படம் வெளியான முதல் நாளே நெகட்டிவ் விமர்சனங்களை சந்திக்க தொடங்கியது. அதை தொடர்ந்து வெளிவந்த விமர்சனங்கள் படத்திற்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. அதனால் வசூலில் மாஸ் காட்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படம் வெளியான ஒரே வாரத்திலேயே படுதோல்வி அடைந்துள்ளது.

அந்த வகையில் தற்போது பொன்னியின் செல்வன் மற்றும் காந்தாரா திரைப்படங்களுக்கு தியேட்டர்கள் அதிகரிக்கப்பட்டு பிரின்ஸ் திரைப்படத்திற்கு தியேட்டர்கள் வெகுவாக குறைக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இப்படம் தற்போது 50 தியேட்டர்களில் மட்டுமே ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த அளவுக்கு பொன்னியின் செல்வன், காந்தாரா படங்கள் ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Also read : விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ள பொன்னியின் செல்வன்.. உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்

Trending News