ஆட்சி மாற்றத்தால் கவனிக்கப்படாமல் போன தமிழ் படம்.. பாகுபலியை மிஞ்சிய பிரம்மாண்ட திரைப்படம்

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து பிரபலமாக இருந்த தியாகராஜன் பல திரைப்படங்களை இயக்கி நம்மை ஆச்சரியப்படுத்தியும் இருக்கிறார். அப்படி அவர் இயக்கத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான ஒரு தரமான படைப்பு தான் பொன்னர் சங்கர் திரைப்படம்.

கலைஞர் மு கருணாநிதியின் நாவலை தழுவி எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தை தியாகராஜன் தயாரித்து, இயக்கி இருந்தார். இப்படத்தில் நடிகர் பிரசாந்த் இரண்டு கேரக்டர்களில் நடித்து இருப்பார். அவருடன் இணைந்து ஸ்னேகா, குஷ்பு, பிரபு, நெப்போலியன், ஜெயராம், விஜயகுமார், ராஜ்கிரண் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தனர்.

இந்தக் கதையை படமாக்க வேண்டும் என்பது கலைஞரின் நீண்டநாள் ஆசையாக இருந்தது. அதை நிறைவேற்ற முன்வந்த தியாகராஜன் இந்த படத்தின் பூஜையை வள்ளுவர் கோட்டத்தில் மிக பிரம்மாண்டமாக 2009 ஆம் ஆண்டு தொடங்கி படப்பிடிப்பை ஆரம்பித்தார்.

பழங்கால கோட்டைகள், அரண்மனைகள் போன்ற செட் போடப்பட்டு ஆரம்பித்த இந்தப் படத்தில் நடிகர்கள் அனைவரும் கடும் உழைப்பைக் கொடுத்து நடித்துள்ளார்கள். அதிலும் இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் கடும் சிரமத்திற்கு இடையில் ராஜஸ்தான் பாலைவனங்களில் நடத்தப்பட்டிருக்கிறது.

30, 000க்கும் மேற்பட்ட துணை நடிகர்கள், 3000 க்கும் மேற்பட்ட யானைகள், குதிரைகள் போன்றவை பயன்படுத்தப்பட்டு பல நாட்கள் இந்த ஷூட்டிங் நடத்தப்பட்டுள்ளது. மேலும் ஒரு போர் காட்சி நீருக்கு அடியிலும் படமாக்கப்பட்டு பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. கேரளா, கர்நாடகா போன்ற இடங்களிலும் இதன் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

இவ்வளவு சிரமப்பட்டு எடுக்கப்பட்ட இந்த படத்தை அப்போதைய அரசியல் கட்சிகள் மோசமாக விமர்சனம் செய்தது. மேலும் இப்படம் வெளிவர தடை விதிக்க கோரி போராட்டமும் நடைபெற்றது. இதையெல்லாம் தாண்டி பொன்னர் சங்கர் திரைப்படம் தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு பிரம்மாண்டமாக வெளியானது.

ஆனால் தேர்தலுக்குப் பின் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாக இந்த திரைப்படம் மிக குறுகிய நாட்களிலேயே தியேட்டரை விட்டு தூக்கப்பட்டது. ஒருவேளை ஆட்சி மாற்றம் ஏற்படாமல் இருந்திருந்தால் இந்த பொன்னர் சங்கர் திரைப்படம் இப்போதைய பாகுபலி திரைப்படத்தை காட்டிலும் மிகப் பெரிய புகழை எட்டியிருக்கும்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்