India | இந்தியா
சொல்றதுக்குள்ள மனுஷன் செஞ்சே முடிச்சிட்டார்.. அதாங்க அஜித்.. பொன்னம்பலம் சொன்ன உண்மை
நாட்டாமை, அபூர்வ சகோதரர்கள், அமர்க்களம், முத்து போன்ற பல படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தவர் பொன்னம்பலம். இவர் சில தினங்களுக்கு முன்பு உடல் நிலை பாதிக்கப்பட்டு கோமா ஸ்டேஜுக்கு சென்று தற்போது வீடு திரும்பியுள்ளார்.
இவருக்காக சினிமா பிரபலங்கள் கமலஹாசன், ரஜினிகாந்த் இன்னும் நிறைய பிரபலங்கள் உதவியுள்ளனர். இதைத்தவிர ரசிகர்களும் தங்களால் முடிந்த காசோலைகளை அனுப்பி அவர் உயிரை மீட்டு எடுத்து உள்ளனர். இந்த நிலையில் நேற்றைய தினம் அவர் அளித்த பேட்டி ஒன்றில் அஜித் சார் உதவி செய்யவில்லையா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார். அதாவது மறைமுகமாக உதவி செய்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அதனுடன் சேர்ந்து இன்னும் ஒரு சுவாரசியமான சம்பவத்தை பகிர்ந்துள்ளார் அமர்க்களம் படத்தில் அவருடன் வேலை பார்த்தபோது தனது நண்பரின் மகனுக்கு ஹார்ட் ஆபரேஷன் செய்வதற்கு 67,000/- ரூபாய் பணம் தேவைப்படுவதாகவும் காலை 9 மணி அளவில் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் மதிய இடைவேளையின் போது பொன்னம்பலம் மறுபடியும் அஜித்தை சந்தித்து எனது நண்பர் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறார் என்று கூறியுள்ளார். உடனே அஜித் காலை 11 மணி அளவில் எனது மனைவி ஷாலினியை வைத்து மருத்துவமனையிலேயே பணத்தை கட்டி விட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.
இதனை கேட்டு ஷாக்காகி விட்டாராம் பொன்னம்பலம், அதாவது உதவியின் முக்கியத்துவத்தை அறிந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு இறங்கி வந்து உதவி செய்யும் அஜித்தின் இந்த குணத்தை தெரிந்து அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இதுபோன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் உதவி செய்ய வேண்டுமென்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். தனக்கு மக்களால் கிடைத்த பணத்தை உதவி செய்யாத ஸ்டண்ட் யூனியனுக்கு திருப்பிக் கொடுத்துவிட்டார் பொன்னம்பலம்.
