Tamil Nadu | தமிழ் நாடு
சாவ கிடந்தும் உதவாத ஸ்டண்ட் யூனியன்.. கோபத்தில் பொன்னம்பலம் செய்த செயலால் அசிங்கப்பட்ட தலைவர்கள்
சில தினங்களுக்கு முன்பு பிரபல வில்லன் நடிகர் பொன்னம்பலம் தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் உடல் ரீதியாக பார்க்கும்போது மூச்சு திணறல், கொரோனா பாதிப்பு, நுரையீரல் பாதிப்பு என்று கடுமையான சூழ்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளார்.
அவர் அளித்த பேட்டியில் உதவி கரங்கள் நீட்டி அனைவர்களுக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார். கமல்,ரஜினி கூட முன் வந்து உதவினர். ஆனால் நான் சாவ கிடந்தும், தாய் வீடாக நினைத்த ஸ்டண்ட் யூனியன் பத்து பைசா கூட கொடுக்கவில்லை என்பது மன வேதனையாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதாவது தலைமை பொறுப்பு சரியில்லை என்றும், தொலைபேசி தொடர்பு கொண்டு கூட நலம் விசாரிக்க வில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொண்டார். முக்கியமாக பார்க்கப் போனால் பண உதவிகள் அவர்கள்தான் செய்திருக்க வேண்டுமாம்.
ஆனால் இந்த மனுஷன் என்ன செய்தார் தெரியுமா.? மக்களிடம் இருந்து பெற்ற உதவித் தொகையான ஒரு லட்சத்து 26 ஆயிரம் ரூபாயை, இவரைப்போல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் ஸ்டன்ட் தொழிலாளர்களுக்கு உதவுங்கள் என்று யூனியனுக்கே கொடுத்துவிட்டாராம்.
தனக்கு உதவி செய்யாத ஸ்டண்ட் யூனியனுக்கு பாடம் கற்பித்து உள்ளார். இனியாவது இதுபோன்ற கலைஞர்களுக்கு உதவுவார்கள் என்று நம்புகிறேன் என கூறியுள்ளார். மக்கள் கொடுத்த பணத்தை திரும்ப கொடுக்க 10 நாள் ஆகுமாம் 1000 பேருக்கு மேல் அனுப்பி உள்ளனர் என்பதால், இப்படி ஸ்டண்ட் யூனியனுக்கு கொடுத்ததற்கு மன்னிப்பும் கேட்டு உள்ளார் மக்களிடம்.
படத்தில் தான் வில்லன், ஆனால் நிஜ வாழ்க்கையில் நல்ல மனிதர் என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதனால் கோலிவுட் வட்டாரமே இவரின் செயலை பார்த்து வாயடைத்து போய்விட்டதாம்.
