fbpx
Connect with us

Cinemapettai

அமேசானில் வெளிவந்த பொன்மகள் வந்தாள் திரை விமர்சனம்.. இனி தியேட்டர் போராட்டம்லாம் என்ன ஆகுமோ

Reviews | விமர்சனங்கள்

அமேசானில் வெளிவந்த பொன்மகள் வந்தாள் திரை விமர்சனம்.. இனி தியேட்டர் போராட்டம்லாம் என்ன ஆகுமோ

கொரோனா வைரஸ் இல்லையெனில் மே 27 திரையில் ரிலீஸ் ஆக வேண்டிய படம். எனினும் தற்பொழுது நள்ளிரவு மே 29 அமேசானில் வெளியாகி உள்ளது. FDFS என சொல்லப்படும் “முதல் நாள் முதல் காட்சி” பார்க்கும் நம்மில் பலர் “முதல் நாள் முதல் ஸ்ட்ரீமிங்(FDFS)” பார்த்தோம் என்பதே உண்மை. வாங்க படத்தை பற்றி பார்ப்போம் ..

கதை – 2004 இல் குழந்தைகளை கடத்தி ஊட்டியில் அடித்து கொன்ற வட இந்திய பெண் ஜோதி பற்றிய விஷயங்களும், குழந்தையை காப்பாற்ற வந்த இருவரை சுட்டு கொள்கிறாள். அந்த சைக்கோ ஜோதி போலீஸ் விசரணையில் என்கவுண்டர் செய்யப்படும் முன்கதையுடன் ஆரம்பம் ஆகிறது.

இன்றயை தேதியில் ப்ப்லிசிட்டி வேண்டி ஊட்டியில் கேஸ் போடும் பெட்டிஷன் பெத்துராஜாக பாக்கியராஜ், அவர் மனைவி வக்கீலாக வினோதினி, மகள் வெண்பாவாக ஜோதிகா ஜோதியின் கேஸை மீண்டும் தூசி தட்டுகிறார் பாக்கியராஜ். தனது முதல் கேஸாக வாதாடுகிறார் ஜோ.

தொழிலதிபர் தியாகராஜன் ஈடுபடுவதுடன் பார்த்திபன் ஆஜராகிறார். நேர்மையான நீதிபதியாக பிரதாப் போத்தன். கோர்ட் ட்ராமாவாக ஆரம்பிக்கும் இப்படத்தில் இன்வெஸ்டிகேஷன் விஷயங்கள் சேர விறு விறுவென்று செல்கிறது படம். வட இந்திய பெண் இல்லை, அவள் மதுரை அருகில் மேலூரை சேர்ந்தவர்; கணவனை ஆவனக்கொலையால் இழந்தவள் என ஆதாரங்களை அடுக்குகிறார் ஜோ. அந்த சக்தி ஜோதியின் மகள் தான் நான் என்பதுடன் வருகிறது இடைவேளை.

ponmagal-vandhal-movie-review

ponmagal-vandhal-jyothika

அதன் பின்பு நடக்கும் விஷயங்களில் ஒவ்வொரு ட்விஸ்ட் முடிச்சியாக ஜோ அவிழ்க்கிறார். பார்த்திபன் தனது திறமையால் மடக்க ஒருபுறம் முயற்சிக்க, தியாகராஜன் தனது பண பலத்தை வைத்து மறைக்க முயல; இறுதியில் ஜோதிகா எப்படி நீதியை நிலைநாட்டினார் என்பதுடன் கிளைமாக்ஸ்சிலும் சிறிய ட்விஸ்டுடன் முடிகிறது படம்.

பிளஸ் – ஜோ, ஒளிப்பதிவு, வசனங்கள், கதாபாத்திர தேர்வு, சொல்ல வந்த மெஸேஜ்

மைனஸ் – எளிதில் ஊகிக்கக்கூடிய ட்விஸ்ட், சில இடங்களில் லாஜிக் ஓட்டைகள்

சினிமாபேட்டை அலசல்- 36 வயதினிலே, ராட்சசி போன்ற வகையில் இப்படமும் கமெர்ஷியல் அம்சம் கம்மியாகவும் படத்தின் மையக்கரு ஸ்ட்ராங்காகவும் உள்ள படம். இவ்வாறு படங்களை தயாரிப்பதற்கு சூர்யா – ஜோதிகா ஜோடிக்கு ஸ்பெஷல் க்ளாப்ஸ்.

பாலியல் வன்கொடுமைகள் அதிகம் நடந்து வரும் சூழலில் ஆண் வர்க்கத்திற்கு பெண்ணின் வலியை சொல்லும் படம்; பெண்கள் தைரியமாக தங்கள் உரிமைக்கு போராட வேண்டும் என சொல்லும் பாடமும் தான் இப்படம்.

சினிமாபேட்டை வெர்டிக்ட் – அஜித்தின் நேர்கொண்டப்பார்வை சொல்ல வந்த மெஸேஜ் போல இப்படமும் தனது நோக்கத்தினை செவ்வனே செய்துள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்.

சினிமாபேட்டை ரேட்டிங் – 3 / 5

Continue Reading
To Top