தல அஜித்தின் ரசிகர்கள் பொங்கலுக்கு பெரும் எதிர்பார்ப்புடன் இருக்கும் படம் தான் விஸ்வாசம். இந்த படத்தின் கொண்டாட்டங்கள் இப்போதே தொடங்கிவிட்டனர் என்பது ஆச்சரியமாக உள்ளது. இது தென்னிந்திய சினிமா வட்டாரங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படமும் பொங்கலுக்கு வெளியாக உள்ளதால் இந்த இரண்டு படங்களிலும் வெளிவரும் தேதி அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சூப்பர் ஸ்டார் மட்டும் அஜித் இருவருமே தமிழ் சினிமாவின் இரண்டு தூண்களாக இருக்கின்றனர். இவர்கள் ரசிகர் பட்டாளம் என்று பார்த்தால் உலக அளவில் இருக்கின்றனர்.

viswasam-ajith
viswasam-ajith

இயக்குனர் சிவாவும் அஜித்தும் சாய்பாபாவின் தீவிர பக்தர்கள் என்பதால் சென்டிமென்டாக வியாழக்கிழமை அன்று இப்படம் வெளியிடப்பட உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். விஸ்வாசம் ஜனவரி 10-ம் தேதி 2019, மற்றும் பேட்ட ஜனவரி 11-ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அப்படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Rajini-petta
Rajini-petta

இப்படத்தின் இளம் இயக்குனரான கார்த்திக் சுப்புராஜ் பீட்சா,  இறைவி, மற்றும் ஜிகர்தண்டா போன்ற பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஒரு பேட்டியில் கூறும்போது தான் சினிமா துறைக்கு எப்படி வந்தேன் என்று கேட்டதற்கு அவர் ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை செய்ததாகவும் ஒரு நாள் மதிய உணவிற்கு வெளியே சென்று விட்டு திரும்பும் போது அவரது அக்சஸ் கார்டு வேலை செய்யவில்லை.  

அப்பொழுது அந்நிறுவனத்தின் human resource டிபார்ட்மென்ட் ஒரு அழைப்பு வந்தது அதில் உங்களை கம்பெனியில் இருந்து நீக்கி விட்டோம் என்று கூறியுள்ளார். அதில் ஏற்பட்ட ஒரு ஸ்பார்க் தான் முழுமையாக சினிமா துறையில் அர்ப்பணித்து கொண்டேன் என்று கூறியுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் என்பதால் படத்தின் எதிர்பார்ப்பு மிக பிரமாண்டமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

வாழ்க்கையில் சோதனைகள் வரும் போது அதனை கண்டு துவண்டுவிடாமல் அதை நாம் வெற்றி காண முதல்படியாக மாற்றி வாழ்வதே சிறப்பானது. தல அஜித் சொல்லுவதுபோல் நாமும் வாழ்வோம் மற்றவர்களை மகிழ்ச்சியாக வாழ வைப்போம்.