Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இன்று தான், இரு துருவங்கள் களத்தில் மோதிக்கொண்டது தெரியுமா.!

தமிழ் சினிமாவில் மிக பெரிய நடிகர்களில் அஜீத், விஜய்யும் உண்டு அஜித் விஜய் இருவருக்கும் இருக்கும் ரசிகர்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். இவர்களின் படம் திரைக்கு வருகிறது என்றால் திரையரங்கமே கோலாகலமாக இருக்கும்.

veeram

தற்பொழுது அஜித் சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தில் நடிக்க இருக்கிறார் அதேபோல் விஜய் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். அஜித் படத்தின் டைட்டில் விசுவாசம் என படக்குழு அறிவித்துவிட்டார்கள், விஜய் படத்திற்கு டைட்டில் வைக்கவில்லை.

மேலும் அஜித் சிவா கூட்டணியில் முதன் முதலாக உருவான திரைப்படம் வீரம் இந்த படம் கடந்த 2014 ம் ஆண்டு பொங்கல் பண்டிகையில் வெளியானது.

jilla-poster

அதேபோல்  விஜய்க்கு ஜில்லா படமும் பொங்கல் பண்டிகையில் தான் வெளிவந்தது இதற்க்கு முன் ஆழ்வார்-போக்கிரி, பின் வீரம்-ஜில்லா இந்த இரண்டு துருவங்களின் படமும் நேரடியாக மோதியது இந்த நாளில் தான் இவர்களின் பல பரீச்சை நடத்திய நாள் 2014 ம் ஆண்டு பொங்கல்.

veeram

இந்த பல பரீச்சையில் விஜய்யின் ஜில்லா படம் ஹிட் அடித்தாலும்,இந்த படத்தை விட அஜித்தின் வீரம் திரைப்படம் சற்று முன்னே சென்று மாபெரும் வெற்றி அடைந்தது அது மட்டும் இல்லாமல் வசூல் ரீதியாகவும் விமர்ச்சன ரீதியாகவும் ஹிட் ஆனது.

jilla-poster

இதனை கொண்டாடும் வகையில் #4YrsOfPongalWinnerVEERAM என்ற டேக்கை இந்திய அளவில் ட்ரென்ட் செய்து வருகிறார்கள் அஜித் ரசிகர்கள். அதுமட்டும் இல்லாமல் இந்த செய்தியை அதிகமாக ஷேர் செய்து வருகிறார்கள்.

இதற்க்கு அடி கொடுக்கும் விதமாக விஜய் ரசிகர்களும் #4YRSOFPONGAL CHAMPJILLA என்ற டேக்கை விஜய் ரசிகர்களும் ட்ரென்ட்  செய்து வருகிறார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top