India | இந்தியா
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, காமராஜருக்கு நிகரான வெற்றிடம் உள்ளது.. பொன்.ராதாகிருஷ்ணன்
தமிழகத்தில் சர்வ நிச்சயமாக வெற்றிடம் உள்ளது, பாரதிய ஜனதா கட்சி உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றக் கூடிய பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் ,உள்ளாட்சி தேர்தல் நாளை நடத்தப்பட்டாலும் பாரதிய ஜனதா தயாராக இருப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் நெல்லையில் தெரிவித்துள்ளார்.
சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சியின் நினைவு தினத்தை முன்னிட்டு பாஜக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணன் நெல்லை டவுனில் உள்ள வஉசி மணிமண்டபத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துனார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர் சந்தித்த அவர் பாஜக உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றக்கூடிய பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் அனைத்து நிலைகளிலும் உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிட முடிவு செய்யப்பட்டு விருப்பமனு பெறப்படுகிறது என தெரிவித்தார். தமிழகத்தில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, காமராஜருக்கு நிகரான வெற்றிடம் உள்ளது.
தமிழகத்தில் தலைவர்கள் உள்ளார்களே தவிர சர்வ வல்லமை பெற்றவர்கள் இல்லை எனவும் தமிழகத்தில் வெற்றிடம் இருப்பது நிதர்சனம் என தெரிவித்தார். .மேலும் உள்ளாட்சி தேர்தல் நாளை நடத்தப்பட்டாலும் பாஜக தயாராக உள்ளது.
நேற்றைய கூட்டத்தில் ரஜினிகாந்த் உலகத்தின் நிதர்சனத்தைதான் சொல்லியுள்ளார், மாற்றம் ஒன்று மட்டும் தான் மாறாதது என உலக மக்கள் நினைப்பதை கூறியுள்ளார் . .ரஜினி கமல் கூட்டணி அமைத்து வரும் தேர்தலை சந்திக்க உள்ளதாக தகவல் வருகிறது என கேட்டதற்கு பாஜகவுடன் அங்கம் வகிக்கும் கூட்டணிதான் இனிமேல் ஆட்சி அமைக்கும்.ரஜினி கமல் கூட்டணி பற்றி எனக்கு தெரியாது என தெரிவித்தார்.
