Sports | விளையாட்டு
மூவர் கூட்டணி, மும்பையின் வெற்றி ரகசியம்.. போட்டு உடைத்த பொல்லார்ட்
பாண்டியா சகோதரர்களை புகழ்ந்து தள்ளியுள்ளார் அந்த அணியின் சக வீரரான கிரண் பொல்லார்டு.
மேலும் அவர் தங்கள் மூவரின் மனநிலையும் ஒரே மாதிரியாக இருப்பதாகவும், வெளியில் வேடிக்கையாக இருந்தாலும் களத்தில் இறங்கி விட்டாள் மிகவும் சீரியஸாக செயல்படுவோம் என கூறியுள்ளார்.
எங்களுக்குள் நிறைய ஒற்றுமைகள் இருக்கிறது, நாங்கள் அணியில் மற்றவர்களுக்கு உதவி செய்கிறோம். பாண்டியா சகோதரர்கள் இருவரும் தன்னம்பிக்கை உடையவர்கள், வியக்கத்தக்கவர்கள், மொத்தத்தில் நல்ல மனிதர்கள். எங்களுக்குள் நல்ல மரியாதை மற்றும் புரிதலும் உள்ளது.
2020 ஐபிஎல் கோப்பையை வெல்வது எங்கள் லட்சியம் அதற்காக இன்னும் பயிற்சி செய்து கொண்டிருக்கிறோம் என தெரிவித்தார். இந்த வருட ஐபிஎல் போட்டியில் அதிக ஸ்ட்ரைக் ரேட் வைத்தவர்கள் பட்டியலில், ஹர்திக் பாண்டியா மற்றும் கிரன் பொல்லார்டு இடம் பிடித்து உள்ளனர்.
ஆல்ரவுண்டர் க்ருனல் பாண்டியா சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஹர்திக் பாண்டியாவிற்கு பந்து வீச்சில் அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை இருந்தாலும் அவரும் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவர் தான்.

Hardika Pandya- Pollard – Krunal –
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
