fbpx
Connect with us

Cinemapettai

பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பரபரப்பு வாக்குமூலம்.. வைரல் ஆடியோ

pollachi-rape-case-group

Tamil Nadu | தமிழ் நாடு

பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பரபரப்பு வாக்குமூலம்.. வைரல் ஆடியோ

பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் பரவி உள்ளது

பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் பரவி உள்ளது அந்த ஆடியோவில் அவர் கூறுவதாவது.

‘எல்லோருக்கும் வணக்கம். நான், பொள்ளாச்சியில் பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் பேசுகிறேன். சபரி, சதீஷ், வசந்த், திருநாவுக்கரசு இவங்கமேல கம்ப்ளைன்ட் கொடுத்தது நான்தான். காரணம், இனிமேல் எந்த ஒரு பெண்ணும் என்னைப் போல் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக மட்டும்தான்.

எங்க குடும்ப நண்பரான மலுமிச்சம்பட்டியைச் சேர்ந்த ஒருத்தங்ககிட்ட இதைப்பற்றி நாங்க பேசியிருந்தோம். அவர், ஆளும்கட்சி பிரமுகரின் கவனத்துக்குக் கொண்டு சென்றார். அதற்கடுத்த நாளே எங்களை அவங்ககிட்ட கூட்டிட்டுப் போனாங்க. நடந்த எல்லாவற்றையுமே நாங்கள் சொன்னோம். அவர், உடனடியா எஸ்.பி பாண்டியராஜன் மற்றும் டி.எஸ்.பி ஜெயராமன் ஆகியோரிடம் பேசி ஆக்‌ஷன் எடுக்கச் சொல்லியிருந்தார்.

அன்று நைட்டே திருநாவுக்கரசைத் தவிர மற்ற எல்லோரையும் அரெஸ்ட் பண்ணிட்டாங்க. அதற்கடுத்த கொஞ்ச நாளிலேயே திருநாவுக்கரசையும் அரெஸ்ட் பண்ணிட்டாங்க. ஆனால், இதை சிலர் அரசியலாக்கிட்டாங்க.

எனக்கு அந்த ஆளும்கட்சி பிரமுகர் கொடுத்த வாக்கு என்னவென்றால், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பெண் நான்தான் என்பதும் என் குடும்பத்தைப் பற்றிய தகவலும் கண்டிப்பாக வெளிவராது என்று சொல்லியிருந்தார். இந்த வழக்கைத் தொடர்ந்து ஒரு மாதம் ஆகிவிட்டது. எப்போ தேர்தல் தேதி அறிவித்தார்களோ… உடனே வந்து என்னைப் பற்றி, என் குடும்பத்தைப் பற்றி வெளியில் கொண்டுவந்து அரசியலாக்கிட்டாங்க.

இந்த மாதிரி சூழலில், பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் குற்றவாளிகளைக் காட்டிக்கொடுக்க மாட்டார்கள். இதன் மூலமா தப்பு செஞ்சவங்க கண்டிப்பா தப்பிச்சிருவாங்க. இந்த வழக்கில், ஆளுங்கட்சியைச் சேர்ந்தவங்க யாருமே இல்லை. அவங்க குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் யாரும் இல்லை. அதனால, இதை அரசியல் ஆக்காமல், தயவுசெய்து இதற்கான நடவடிக்கை எடுக்குமாறு எல்லோர்கிட்டேயும் நான் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்.

வதந்தி பரப்புகிற யார்கிட்டயாவது ஆதாரம் இருந்தால், அதைக் கொடுத்து உடனடியா இதற்கு ஆக்‌ஷன் எடுக்க வேண்டும் என்று எல்லோர்கிட்டயும் கேட்டுக்கொள்கிறேன். இந்த விஷயத்தினால் நானும் எனது குடும்பமும் ரொம்பவும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறோம்.

இந்த விஷயத்தில், முதன் முதலாக உதவிசெய்தது அந்த ஆளும்கட்சிப் பிரமுகர்தான். அவருக்கு ரொம்ப நன்றி. தேவைப்பட்டால், இந்த செய்தியை மீடியா வரைக்கும் கொண்டுபோவோம். இந்த நாலு பேர் செஞ்ச கொடுமையைவிட, அரசியல் ஆதாயத்துக்காக சிலபேர் செய்கிற செயல் என்னையும் என் குடும்பத்தையும் தற்கொலை செய்யத் தூண்டுகிறது.

இதில், பொள்ளாச்சியைச் சேர்ந்த யாருமே எங்களுக்கு ஹெல்ப் பண்ண வரலை. மலுமிச்சம்பட்டியைச் சார்ந்த பிரமுகர் மட்டும்தான் முன்வந்து உதவி செய்தவர்’ என்று அந்த ஆடியோவில் கூறியிருக்கிறார்.

நன்றி: தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top