fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

அரசியலில் ரஜினியால் முடியாததை விஜய் செய்வார்! மதுரையில் பரபரப்பை ஏற்படுத்திய போஸ்டர்

Tamil Nadu | தமிழ் நாடு

அரசியலில் ரஜினியால் முடியாததை விஜய் செய்வார்! மதுரையில் பரபரப்பை ஏற்படுத்திய போஸ்டர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புதிய கட்சி தொடர்பான அறிவிப்பை டிச.31-ந் தேதி வெளியிடுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்நிலையில், ஏற்கனவே கமிட் ஆன அண்ணாத்த படத்தை முடிக்க ஹைதெராபாத் கிளம்பினார். பிறந்தநாள் முடிந்த பின் ஷூட்டிங், அதன் பின்னர் தீவிர ஆன்மிக அரசியல் என சொல்லப்பட்டது. ஆட்டோ தான் சின்னம் என பலரும் கொண்டாடினர்.

ஏனினும் ஷூட்டிங்கில் சிலருக்கு கொரானா தொற்று ஏற்பட, ரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் தமிழகம் திரும்பினார். மேலும் தான் கட்சி தொடங்கவில்லை என ரஜினிகாந்த் அதிரடியாக அறிவித்தார். ரஜினியின் இந்த அறிவிப்பு அவருடைய ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை கொடுத்தது. தற்பொழுது சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார் என்கின்றனர்.

இந்நிலையில் தளபதி விஜயின் ரசிகர்கள் ஒட்டியுள்ள ஒரு போஸ்டர் சிறிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை தெற்கு மாவட்ட  விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், “இப்ப வேணாம் 2026ல் இல்லன்னா எப்பவுமே இல்லை… நீங்கள் வாங்க தம்பி” என ரஜினிகாந்த் விஜய் அவர்கள் கையை பிடித்து அரசியலுக்கு அழைப்பது போல் உள்ளது. “அதிசயம், அற்புதம் உங்களால் மட்டுமே சாத்தியம் ரஜினி சார்… உங்கள் லட்சியம் தளபதியால் நிறைவேறும் நிச்சியம்.” என்றும் அச்சடித்துள்ளனர்.

ஏற்கனவே விரக்த்தியில் இருக்கும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுக்க முயற்சி செய்கிறார்களா விஜய் மக்கள் இயக்க நபர்கள் என்றே யோசிக்க தோன்றவைக்கிறது இந்த போஸ்டர்.

politics poster by vijay fans

எனினும் ரஜினி ரசிகர்களையும், மன்ற நிர்வாகிகளையும் கடுப்பில் தான் ஆழ்த்தியுள்ளது இந்த போஸ்டர் என்பதே நிதர்சனமான உண்மை.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top