fbpx
Connect with us

Cinemapettai

தளபதி விஜய்யின் பிறந்தநாள் வாழ்த்து சொன்ன அரசியல் பிரபலம்.. குருவி-2 க்கு ப்ளான் போடுகிறார் போல!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தளபதி விஜய்யின் பிறந்தநாள் வாழ்த்து சொன்ன அரசியல் பிரபலம்.. குருவி-2 க்கு ப்ளான் போடுகிறார் போல!

விஜய்யின் பிறந்தநாளுக்கு கோலிவுட் முதல் பாலிவுட் வரை அனைத்து நடிகர்களும் டுவிட்டரில் வாழ்த்து மழை பொழிந்துள்ளனர். அதிலும் பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் வாழ்த்து சொன்னதெல்லாம் வேற லெவல்.

அதேபோல் தமிழ் சினிமாவில் விஜய்யை வைத்து முதன்முறையாக தயாரிப்பாளராக அறிமுகமானவர் தான் அந்த அரசியல் பிரபலம் உதயநிதி ஸ்டாலின். விஜய்யை வைத்து தான் முதல் படம் தயாரிப்பேன் என ஒற்றைக்காலில் நின்று குருவி படத்தை தயாரித்தார்.

படம் எதிர்பார்த்த அளவு செல்லவில்லை. அதனால் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டதாகவும் செய்திகள் கிளம்பியது. ஆனால் அது உண்மை இல்லை என்பதை அவர் கூறிய பிறந்தநாள் வாழ்த்து மூலம் தெரியவந்துள்ளது.

தளபதி விஜய்யின் பிறந்தநாளுக்கு உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அண்ணன் தளபதி விஜய் என்று கூறியது விஜய் ரசிகர்களை கொண்ட வைத்துள்ளது.

udhay-tweet

udhay-tweet

ஏற்கனவே அரசியலில் தளபதியாக இருப்பவர் உதயநிதியின் தந்தை ஸ்டாலின். சினிமாவில் தளபதியாக இருப்பவர் விஜய். இருந்தாலும் எந்த ஒரு ஈகோவும் இல்லாமல் அண்ணன் தளபதி என வாழ்த்து தெரிவித்தார். கத்தி படத்தில் திமுகவை நேரடியாக விமர்சித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இதை வைத்து கோலிவுட் வாசிகள் விஜய்க்கு இருக்கும் மார்க்கெட் ரேஞ்சுக்கு அவரை வைத்து படம் தயாரிக்க உதயநிதி ஸ்டாலின் ப்ளான் போடுகிறார் போல என கிசுகிசுத்து வருகின்றனர்.

படம் தயாரித்தாலும் பரவாயில்லை, குருவி படத்தின் இரண்டாம் பாகமாக மட்டும் இருக்க வேண்டாம் என கிண்டல் செய்கிறார்களாம்.

Continue Reading
To Top