இளையதளபதி விஜய்க்கு இன்று 43 வது பிறந்தநாள். ரசிகர்கள், சினிமா உலகினர் என பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்கள். இந்நிலையில் நடிகரும், பா.ஜ.க சேர்ந்த எஸ்.வி.சேகர் விஜய்க்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

விஜய் மிகவும் கடின உழைப்பால் படிப்படியாக உயர்ந்து முன்னிலக்கு வந்தவர் நடிகர் விஜய். நான் மூத்தவன் என்ற முறையில் அவருக்கு என ஆசிர்வாதங்கள். விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகிறார்கள்.

அவர் அரசியலுக்கு வரக்கூடிய சூழல்கள் இருக்கிறது. அது எப்போது என்பது விஜய்க்கு தான் தெரியும். அவருக்கு என் ஆதரவு உண்டு. மேலும் அவர் நல்லவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும்.

வருங்கால முதலமைச்சர் விஜய்க்கு என் வாழ்த்துக்கள் என எஸ்.வி.சேகர் கூறியிருக்கிறார்.