Tamil Cinema News | சினிமா செய்திகள்
புரட்சியும் இல்லை! புண்ணாக்கும் இல்லை! சர்கார் பாடலை விமர்சித்த பிரபல அரசியல்வாதி
சர்கார் படத்தின் பெயர் வைக்கும் பொழுதே வரப்போகும் பிரச்சினைகளையும் சமாளிக்க முன்கூட்டியே யோசித்து வைத்திருந்தனர். ஏனென்றால் தலைவா படத்தில் நடந்த விஷயம் அனைவருக்கும் தெரியும் இருந்தாலும் விடாப்பிடியாக விஜய் அவர் வழியிலேயே சென்று கொண்டிருக்கிறார் சர்கார் படத்திலும் அது தொடரும்.
சர்கார் படத்தில் இருந்து சமீபத்தில் வெளியான ஒரு விரல் புரட்சி என்னும் பாடல் நல்ல வரவேற்பை பெற்று யூடியூப்பில் சாதனை மேல் சாதனை படைத்து வருகிறது. இதற்கு ஒரு விளம்பரம் வேண்டுமல்லவா அதற்காக பாஜகவிலிருந்து அர்ஜுன் சம்பத் ஒரு குரல் கொடுத்துள்ளார். அதாவது
‘புரட்சியுமில்லை புண்ணாக்குமில்லை
இப்போதைக்கு புரட்சி, போராட்டங்களை பற்றி படமெடுத்தால் நன்றாக ஓடுமென்று சினிமா seasonal புரட்சியாளர்களுக்கு தெரியும்
சினிமா பாடல்களில் புரட்சியான வரிகளை புகுத்துவதென்பது
விவாத, எதிர்ப்புகள் மூலம் பிரபலநோக்கு காண வியாபாராயுக்தி
அவ்வளவே!’ என்று கூறியுள்ளார்.
பாடல் மட்டும் வெளியாகும்போதே பிரச்சனைக்கான அறிகுறி தெரிகிறது. முழு படமும் வந்தால் முழு விவரம் தெரியும். ஏற்கனவே மெர்சல் படத்தில் இவர்கள் பண்ணிய விளம்பரத்தால் கிடைத்த லாபம் பல கோடி. மீண்டும் தொடர வாழ்த்துக்கள்.
புரட்சியுமில்லை புண்ணாக்குமில்லை
இப்போதைக்கு புரட்சி, போராட்டங்களை பற்றி படமெடுத்தால் நன்றாக ஓடுமென்று சினிமா seasonal புரட்சியாளர்களுக்கு தெரியும்
சினிமா பாடல்களில் புரட்சியான வரிகளை புகுத்துவதென்பது
விவாத, எதிர்ப்புகள் மூலம் பிரபலநோக்கு காண வியாபாராயுக்தி
அவ்வளவே!— Arjun Sampath (@imkarjunsampath) October 1, 2018