
கோலிவுட்டில் உச்ச நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். இவரது நடனம் பேச்சு என அனைத்திற்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். விஜய்யும் மற்ற ஹீரோக்களை போல் படங்கள் நடிக்காமல், சமூக கருத்துக்கள் மற்றும் அரசியல் பேசும் கதைகளில் தான் அதிக ஆர்வம் காட்டி நடித்து வருவார்.
அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான சர்கார் மற்றும் மெர்சல் ஆகிய படங்கள் நாட்டில் நிலவும் அரசியலை அப்பட்டமாக காட்டும் வகையில் இருந்தது. இதனால் அந்த படங்களுக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் வந்தது. குறிப்பாக மெர்சல் படத்திற்கு பிஜேபி தரப்பில் இருந்து மிகவும் கடுமையான மிரட்டல்கள் வந்தது.
ஆனால் விஜய் அதையெல்லாம் பெரிதாக நினைக்கவே இல்லை. அதுமட்டுமின்றி ஒவ் படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் விஜய் பேசுவதை கேட்க ரசிகர்கள் அவ்வளவு ஆர்வமாக இருப்பார்கள். காரணம் அவர் பேச்சு தான். மனுஷன் சும்மா தெறிக்க விடுவாரு. அந்த வகையில உசுப்பேத்துறவன்கிட்ட உம்முனும் கடுப்பேத்துறவன்கிட்ட கம்முனும் இருந்தா வாழ்க்கை ஜம்முனு இருக்கும்னு விஜய் சொன்ன டயலாக்கெல்லாம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.
ஆனால் சமீபகாலமாக விஜய் அவரது படங்களிலும் சரி நிகழ்ச்சிகளிலும் சரி அரசியல் குறித்து எதுவும் பேசுவதில்லை. எந்த பிரச்சனையையும் தனது படம் மூலம் தைரியமாக பேசி வந்த விஜய் சமீபகாலமாக அமைதி காப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் விஜய் அமைதியாக இருக்க இதுதான் காரணம் என கூறப்படுகிறது. அதன்படி நடிகர் விஜய் தொடர்ந்து அவர் படங்களில் அரசியல் பேசி வந்ததால் கடந்த 2020ஆம் ஆண்டு அவர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது. ஆனால் அந்த ரைடில் விஜய் வீட்டில் இருந்து ஒரு ரூபாய் கூட கிடைக்கிவில்லை.
இருப்பினும் தற்போது விஜய் எந்தவொரு பிரஸ் மீட் மற்றும் சோசியல் மீடியாவில் அதிக ஈடுபாடு இல்லாமல் இருக்க இந்த ரைடு தான் காரணம் என கூறப்படுகிறது. மெர்சல் படத்தில் பிஜேபி ஆட்சி குறித்து விஜய் மறைமுகமாக பேசியதால் தான் அவர் வீட்டில் ரைடு நடந்ததாக அப்போது கூறப்பட்டது. ஒருவேளை அதனால் தான் தற்போது விஜய் அமைதி காக்கிறார் போல.