Tamil Cinema News | சினிமா செய்திகள்
சித்ராவை கட்டாயப்படுத்திய அரசியல் பிரபலம்.. திறப்பு விழாவுக்கு கூப்பிட்டு கோர்த்து விட்ட பரிதாபம்
சின்னத்திரை நடிகை சித்ரா சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டது தமிழ் சினிமா வட்டாரங்களை உலுக்கியது. ஒவ்வொரு முறையும் சின்னத்திரை நடிகர்கள் தற்கொலை செய்யும் போது பெரிதாக வரும் செய்தி அதன் பிறகு அப்படியே மூடி மறைக்கப்பட்டு விடுகிறது.
இதுவரை தற்கொலை செய்துகொண்ட சின்னத்திரை நட்சத்திரங்களின் உண்மை காரணம் என்ன என்பது தற்போது வரை தெரியவில்லை. அதே போல் சித்ராவின் தற்கொலை காரணமும் வெளிவராமல் போய்விடுமோ என ரசிகர்கள் சோகத்தில் இருக்கின்றனர்.
நள்ளிரவு வரை படப்பிடிப்பை முடித்துவிட்டு வந்த சித்ரா, ஹோட்டல் அறைக்கு வந்த சில மணி நேரங்களிலேயே தூக்கு போடும் அளவுக்கு அவருக்கு டார்ச்சல் கொடுத்தது யார்? என்பதை தற்போது தோண்டித் துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

vj-chitra-cinemapettai
பெரும்பாலும் சித்ரா தற்கொலை செய்து கொண்டதற்கு அவரது கணவர் ஹேமந்த் என்பவர் தினமும் மது அருந்திவிட்டு தேவையில்லாமல் சித்ராவின் மேல் சந்தேகம் அடைந்து அவரை டார்ச்சல் செய்ததாக தெரிகிறது. மேலும் சித்ரா சமீபத்தில் ஒரு கடை திறப்பு விழாவுக்காக பெரம்பலூர் வரை சென்றுள்ளார்.
மேலாளர் ஒருவரை நம்பி சென்ற சித்ராவுக்கு அங்கு அரசியல் பிரபலம் ஒருவரின் அறிமுகம் கிடைத்துள்ளது. சரி, விழா தானே என சகஜமாக சித்ரா பேச, அந்த அரசியல் பிரபலம் அட்வான்டேஜ் எடுத்துக் கொண்டதாக தெரிகிறது.
மேலும் இந்த வருடம் புத்தாண்டை என்னுடன் கொண்டாட வேண்டுமென சித்ராவை டார்ச்சல் செய்து வந்தாராம். இதனால் மன அழுத்தம் தாங்க முடியாமல் இரண்டு பக்கமும் பிரச்சனை வந்ததையொட்டி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என மேலோட்டமாக கூறி வருகின்றனர்.
அந்த அரசியல்வாதி யார்? அந்த மேலாளர் யார்? அவர்களை கண்டுபிடித்து சரியான தண்டனை அளித்தால் மட்டுமே சித்ராவின் ஆன்மா சாந்தி அடையும் என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஆனால் காசு இருக்கும் வரை நியாயம், தர்மம் எல்லாம் ஜெயிக்குமா என்பது கேள்விக்குறிதான்.
