fbpx
Connect with us

மக்கள் பிரச்சினையை அப்படியே தோலுரித்த காட்டிய பிரம்மாண்ட படங்கள்..

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மக்கள் பிரச்சினையை அப்படியே தோலுரித்த காட்டிய பிரம்மாண்ட படங்கள்..

உச்சகட்ட ஊழலை வெளிப்படுத்திய இந்தியன் படம் 1996-ம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் கமலஹாசனுடன் மனிஷா கொய்ராலா நடித்து இருப்பார். பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் படைப்பில் இது தமிழ் சினிமாவின் தலைசிறந்த படம் என்றே கூறலாம். ஒரு அரசாங்க அதிகாரி ஊழலை நாட்டின் பெரும் வீழ்ச்சி என்ற கருத்தை கொண்டு உருவாகி திரைப்படம். இந்த படத்தில் ஊழலுக்காக தன் மகனையே கொள்ளும் கமலஹாசன் ஊழலை வென்று ஜெயித்து நிற்பார் என்றே கூறலாம்.

2005 ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த படம் அண்ணியன் இந்த படம் ஒரு நாட்டு குடிமகன் ஒழுக்கத்தையும் மனிதநேயத்தையும் மற்றும் ஒற்றுமையும் பற்றி எடுத்துரைக்கும் திரைப்படமாக அமைந்தது.

2006 ஆம் ஆண்டு குரு சோமசுந்தரம், ரம்யா பாண்டியன் இருவரும் நடித்து மெகா ஹிட்டான ஜோக்கர் திரைப்படம். நாட்டில் நடக்கும் ஊழல் அதனால் பாதிக்கப்பட்ட நடுத்தர குடும்பத்தை பற்றி எடுக்கப்பட்ட திரைப்படம்.

2009ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் உருவான பேராண்மை திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது ஒரு நாட்டின் வர்த்தகத்தால் வரும் வளர்ச்சியை பெரும் வளர்ச்சி அத்தகைய வர்த்தகத்தை அழிந்தால் அந்த நாடே அழியும் என்பதை மையப்படுத்தி உருவாக்கிய கதை. தமிழ் சினிமாவில் ஜெயம் ரவிக்கு இந்த படம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்றே கூறலாம்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு தளபதி விஜயுடன் இணைந்து வெளிவந்த படம் தான் கத்தி. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடித்து இருப்பார், விவசாயம் மற்றும் தண்ணீரின் முக்கியத்துவத்தை பற்றி கூறியுள்ள இந்த திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்லாமல், இந்திய அளவில் திரும்பி பார்க்க வைத்த படம் என்றே கூறலாம்.

2018ஆம் ஆண்டு கதிர் மற்றும் ஆனந்தி இருவரும் இணைந்து நடித்த பரியேறும் பெருமாள் திரைப்படம் ஜாதியால் தீண்டாமை எனும் கொடிய நோயால் கொடுக்கப்படும் சட்டக் கல்லூரி மாணவனின் கதையை மிக அற்புதமாக வெளிக்கொண்டு வந்து இருப்பார் இயக்குனர் மாரி செல்வராஜ்.

2019ஆம் ஆண்டு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற படம் டூ-லெட் இந்த படத்தில் சந்தோஷ் ஸ்ரீராம் போன்றவர் நடித்திருப்பார்கள். சென்னையில் உள்ள ஐடி ஊழியர்கள் வாடகை வீடு மற்றும் அப்பார்ட்மெண்ட் வாழ்க்கை எப்படி மாறிவிட்டது என்பதை மிகத் துல்லியமாக தெளிவு படுத்தி இருப்பார் இயக்குனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட படம் தான் 2.O. இந்த படத்தில் ரஜினிகாந்துடன் சேர்ந்து அக்ஷய்குமார் நடித்திருப்பார் முன்னேற்றத்தை நோக்கி செல்லும் இவ்வுலகில் அறிவியலால் பாதிக்கப்படும் உயிரினங்களைப் பற்றி எடுத்துரைக்கும் படமாக அமைந்தது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top