Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

உண்மை தெரியாமல் செய்தி வெளியிட்ட பிரபல டிவி.. கிழித்து தொங்கவிட்ட எஸ்ஆர் பிரபு.

sr prabhu kaithi

கடந்த 2019ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது. இப்படத்தை எஸ் ஆர் பிரபுவின் ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக இப்படத்தின் கதை திருட்டுக்கதை எனவும், உண்மையிலேயே கைதி ஒருவரிடமிருந்து வெறும் பத்தாயிரம் ரூபாய்க்கு கதையை வாங்கி லோகேஷ் கனகராஜ் மற்றும் எஸ்ஆர் பிரபு கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து விட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

மேலும் கைதி படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பதற்கும் இப்படத்தை மற்ற மொழிகளில் ரீமேக் செய்வதற்கு கேரள நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. இது குறித்து மிகுந்த மனவருத்தத்துடன் படத்தின் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, “ஒரு வழக்கின் முழு விபரம் கூட அறியாமல் ஒரு இயக்குனரை களங்கப்படுத்தி செய்தி பதிவது கேவலமான செயல். அதை ஒரு செய்தி நிறுவனம் செய்வது அதனினும் மோசமானது. அட்மினுக்கு அறிவுறுத்துங்க ஐயா!” என கூறியுள்ளார்.

sr prabhu

sr prabhu

சமீபகாலமாகவே எல்லா படத்தோட கதைக்கும் சொந்தம் கொண்டாடிக்கிட்டு யாரோ ஒருத்தர் வந்துட்டு தான் இருக்காங்க. இது தமிழ் சினிமாவில் வழக்கமான ஒரு கதை ஆகிடுச்சு.

பாலிமர் தொலைக்காட்சி எப்போதுமே ஒரு செய்தியை முதலில் நாம் தான் போட வேண்டும் என அவசரப்பட்டு பலமுறை செய்திகளை வெளியிட்டுள்ளனர் அப்படி தற்போது கைது படத்தினை பற்றி முழுசாக தெரியாமல் ஒரு செய்தி நிறுவனம் இந்த மாதிரி செய்வது தவறு என படத்தின் தயாரிப்பாளர் வெளிப்படையாக அவரது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியுள்ளது பலருக்கு ஆச்சரியமாக இருந்தாலும் தைரியத்தை பாராட்டுவதாக பலரும் கூறி வருகின்றனர்.

எப்போதுமே மக்களுக்கு உண்மையை சொல்ல கூடிய ஒரு ஊடகம் ஒரு செய்தியைப் பற்றி வெளியிடும்போது அதனை பற்றி முழு விவரம் தெரிந்த பிறகு எது உண்மை என்பதனை அறிந்த பிறகு ஒளிபரப்ப வேண்டும். ஆனால் சமீப காலமாக பல ஊடகங்களும் தனக்கு தோன்றியதை எல்லாம் கூறி கேவலமான செயல்களில் ஈடுபட்டு வருவது வாடிக்கையாகி உள்ளது இதனை பற்றி உங்கள் கருத்தை கமெண்ட் பாக்சில் பதிவு செய்யலாம். இனிமேலாவது நாம் தொலைக்காட்சி நிறுவனம் என்பதால் என்ன வேணாம் சொல்லலாம் என்று சொல்லாதீர்கள் என்பதற்கு இதுவே ஒரு சான்றாகும்

Continue Reading
To Top