Connect with us
Cinemapettai

Cinemapettai

porn-police

Tamil Nadu | தமிழ் நாடு

ஆபாச படங்களை பரப்புவதில் முக்கியமான மூன்று குரூப்.. வசமாக தூக்க ரெடியான போலீசார்

தற்போது தமிழ்நாட்டில் அரசியலை விட மிகவும் பரபரப்பாக பேசப்படுவது ஆபாச படம் பார்ப்பவர்களை போலீசார் விரைவில் கைது செய்வார்கள் எனக் கூறியது தான். மேலும் அந்த லிஸ்டில் 3000 நபர்கள் இடம் பெற்றிருப்பதாகவும் தமிழக காவல்துறையிடம் அறிவிப்பு வந்தது.

அதனால் தற்போது பல இளைஞர்கள் செய்வதறியாமல் முழித்து வருகின்றனர். முக்கியமாக 90ஸ்கிட்ஸ் என அழைக்கப்படும் 90களில் பிறந்த இளைஞர்கள் மிகவும் பயந்துகொண்டு இருப்பதாக பல மீம்ஸ்கள் வெளியாகி பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கின்றன.

ஆனால் குழந்தைகள் சம்பந்தப்பட்ட படங்களை பரப்புவது மற்றும் அதனை பார்ப்பது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை மட்டுமே கைது செய்ய இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இருந்தும் நீயா நானா என குழப்பத்தில் தான் நிறைய இளைஞர்கள் சுற்றிக் கண்டுள்ளனர்.

இந்த தகவல்கள் அனைத்தும் அமெரிக்க புலனாய்வுத் துறை அமைச்சகத்தால் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் தினமும் இரவில் வெளிநாடு சென்று வரும் இளைஞர்கள் பயந்து போய் உள்ளனர்.

மேலும் பயத்தை அதிகரிக்கும் விதமாக குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாச படங்களை பரப்பும் முக்கியமான மூன்று குழுவினரை அதிரடியாக கைது செய்ய இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். உலக அளவில் இந்தியாவில்தான் ஆபாச படம் பார்க்கும் நபர்கள் அதிகம் எனவும், அதில் தமிழ்நாட்டில் உள்ள சென்னையில் தான் மிகவும் அதிகம் என தெரிவித்துள்ளனர்.

இதனால் சென்னை வாழ் இளைஞர்கள் கடந்த ஒரு வாரமாக வெளிநாடு செல்லாமல் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சாரி ஜானி சின்ஸ் சார், ஒரு வாரமா உங்கள பாக்க முடியல, நல்லா இருக்கீங்களா

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top