பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொள்வது வழக்கம், கடந்தாண்டு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராக்கி சாவந்த் ‘ராமாயணம்’ எழுதிய வால்மீகி குறித்து சர்ச்சையான கருத்தை கூறினார்.

இது தொடர்பாக பஞ்சாப் மாநிலம் லூதியானா நீதிமன்றத்தில் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நீதிமன்றத்தில் நேரில் வந்து ஆஜராகும் படி அவருக்கு பலமுறை சம்மன் அனுப்பட்டும் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அதையடுத்து நீதிபதி அவருக்கு கைது பிடிவாரண்ட் பிறப்பித்தார்.

அவரை கைது செய்ய பஞ்சாப் போலீசார் கடந்த வாரம் மும்பை சென்று போது அவர் வீட்டில் இல்லை. இது தொடர்பான வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரனைக்கு வந்தது. அப்போது, நீதிபதி ராக்கி சாவந்துக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத கைது வாரன்டை பிறப்பித்தார் நீதிபதி. இதனால் அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது