fbpx
Connect with us

Cinemapettai

நடிகர் அஜித்தின் வீட்டில் வனத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை?.. பரபரப்பு

Tamil Nadu | தமிழ் நாடு

நடிகர் அஜித்தின் வீட்டில் வனத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை?.. பரபரப்பு

பிரபல நடிகர் அஜித்தின் வீட்டில் வனத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியதாக தகவல்கள் பரவியது. அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா மலைப்பாம்பு வைத்திருந்ததாக கூறப்படும் புகார் குறித்து விசாரித்தாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சென்னை திருவான்மியூரில் உள்ள அஜித்தின் வீட்டிற்கு வந்த வனத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது.

நடிகர் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா என்பவர் மலைப்பாம்பு ஒன்றை வளர்த்து வருவதாக தகவல் வெளியானது.

இதன் பேரிலேயே திருவான்மியூரில் உள்ள அஜித்தின் வீட்டிற்கு சென்று சுரேஷ் சந்திரா குறித்து விசாரித்த வனத்துறை அதிகாரிகள் மலைப்பாம்பு குறித்தும் சோதனை செய்தார்கள் என்றும் தகவல் பரவியது. இந்த தகவலால் அஜித் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே சுரேஷ் சந்திராவின் மதுர வாயலில் உள்ள வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தி சென்றதாகவும் அந்த சோதனையில் மலைப்பாம்பு எதுவும் அங்கு இல்லை என்பது தெரியவந்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top