சென்னை மெரினாவில் திங்கள்கிழமை காலை போராட்டக்காரர்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.

இதனால் பதற்றமான சூழல் நிலவியது. சென்னை ஐஸ் அவுஸ் பகுதியில் காவல்துறை வாகனத்திற்கு அடையாளம் தெரியாத சிலர் தீ வைத்து எரித்தனர். இதனால் மேலும் பதற்றமானது.

இதனை புகைப்படம் எடுக்கவும், வீடியோ எடுக்கவும் செய்தியாளர்கள் முயற்சித்தனர். ஆனால், அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகங்களுக்கு அனுமதி மறுத்து தடுத்து நிறுத்தினர்.

கலவரத்தில் ஈடுபட்டவர்களை புகைப்படம், வீடியோ எடுக்க விடாமல் போலீசார் தடுத்தனர். மேலும், அப்பகுதியில் இருந்து செய்தியாளர்களை போலீசார் விரட்டி விரட்டி துரத்தி அடித்தனர்.

ஊடக நிறுவனத்தின் அடையாள அட்டையை காண்பித்த பின்னரும் கண்மூடித்தனமாக போலீசார் தாக்குதல் நடத்தினர். இதில் பாலிமர் தொலைக்காட்சி செய்தியாளர் சுரேந்திரன் என்பவருக்கு பலத்தக் காயம் ஏற்பட்டது.

ரத்தம் சொட்டும் நிலையில், அவர் தனது அடையாள அட்டையை காண்பித்துள்ளார். என்றாலும், போலீசார் அதனை ஏற்காமல் தாக்குதல் நடத்தினர். இதேபோல் தினகரன் பத்திரிகையை சேர்ந்த போட்டோகிராபர் அருண் என்பவரையும்,

தீக்கதிர் கேமரா மேன் லட்சுமி காந்த் பாரதி என்பவரையும் கண்மூடித்தனமாக போலீசார் தாக்குதல் நடத்தினர்.

போலீசாரின் இந்த தாக்குதலை பல்வேறு பத்திரிகையாளர் சங்கங்களும், ஊடக நிறுவனங்களும் வன்மையாக கண்டித்துள்ளன.

நேற்று மாலையே பத்திரிக்கையாளா்களை விரட்டி விரட்டி, துரத்தி அடித்ததற்கான காரணம் தெரிந்தது. கலவரத்தை தூண்டியதே காவல்துறைதான் என்பதற்கு சாட்சியாக வீடியோ பதிவு வெளியானது.

போலீசாரே சமூக விரோத செயலில் ஈடுபடத்தான். பத்திரிக்கயைாளா்கள் தாக்கப்பட்டனா் என்கிற உண்மை வெளிச்சத்துக்கு வந்த பின்னர் இது உறுதியானது.

இந்த சம்பவங்களை எல்லாம் ஒரு பத்திரிக்கையாளா்தான் அதிக போலீசார் அந்த இடத்தில் குவிக்கும்போதிலிருந்து தங்களது சோர்ஸ் மூலமாக மறைந்து, மறைந்து வீடியோ எடுத்துள்ளார் என்பது குறிப்பிட தக்கது.

இதுாண்டா நாங்க..! மார்த்தட்டிக் கொள்ளும் பத்திரிக்கையாளா்கள். இவா்களுக்கு போராட்டக்காரா்களிடம் இருந்து வாழ்த்துகள், நன்றிகள் குவிந்து வருகிறது.