Tamil Cinema News | சினிமா செய்திகள்
தளபதி விஜய்யை பின்பற்றும் ஐபிஎஸ் அதிகாரி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி சரவணன் என்பவர் தளபதி விஜய்யின் குறிக்கோள்களை பின்பற்றி வாழ்வதாக ஒரு கல்லூரி விழாவில் கூறியது தளபதி ரசிகர்கள் இடையே சந்தோஷத்தை ஏற்படுத்தியது.
அவர் கூறியதாவது, தீபாவளி அன்று வெளியான பிகில் பட வெளியீட்டின்போது போது ரசிகர்கள் மண்சோறு சாப்பிடுதல், காவடி எடுத்தல் போன்ற வேண்டுதலை பற்றி கேவலமாக பேசிய தமிழ் நியூஸ் சேனல், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அவரது ரசிகர்கள் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கொடுத்ததை பெருமையாக பேசியதாகவும் நினைவூட்டினார்.
மேலும் தான் விஜய்யிடம் கற்றுக் கொண்டது என்னவென்றால், எதிரிகளை பழி வாங்குவது கூடாது என்றும், அவர்கள் முன்னால் நன்றாக வாழ்ந்து காட்டுவதே அவர்களுக்கு மிகப்பெரிய தண்டனை என்று கூறியதை இன்று வரை சரவணன் பின்பற்றி வருவதாக தெரிவித்து இருந்தார்.
மேலும் தளபதி விஜய்யின் ஆரம்ப காலத்தில் அவரைப் பற்றி தவறாக பேசிய வார இதழில் அவரது புகைப்படத்தை அட்டைப்படத்தில் போட்டு லாபம் சம்பாதித்த விஷயங்களையும் பகிர்ந்து கொண்டார். இதனால் ஒரு காவல்துறை அதிகாரியே தளபதி விஜய்யை பாராட்டியது அவரது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
IPS Saravanan about #Thalapathy #Vijay @actorvijayhttps://t.co/6IGIbhavBj#Bigil
— Actor Vijay Universe (@ActorVijayUniv) November 22, 2019
