Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய் மீது வழக்கு! ரசிகர்களின் போஸ்டரால் விஜய்க்கு வந்த சோதனை
விஜய் இந்து மதத்தை புண்படுத்தியதாக கூறி அவர் மீது சென்னை மாநகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அட்லி இயக்கத்தில் விஜய் தன்னுடைய 61வது படத்தில் 3 கெட்டப்புகளில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா மற்றும் நித்யா மேனன் ஆகியோர் பலர் நடிக்கின்றனர். இந்நிலையில், இப்படம் தொடர்பாக விஜய் கையில் சூலாயுதம் வைத்து ரசிகர்கள் ஒரு போஸ்டர் உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது
தற்போது இந்த போஸ்டர் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த போஸ்டர் தொடர்பாக இந்து முன்னணி கட்சி சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், விஜய் கையில் சூலாயுதத்தை வைத்துக்கொண்டு நடனம் ஆடுவது இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் உள்ளதாக கூறி விஜய் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
