Connect with us

Cinemapettai

jai

Cinema News | சினிமா செய்திகள்

அனைத்து நடிகர்களுக்கும் வலை! அதில் முதல் பலி ஜெய்..

நம்ம நடிகர்கள் வர வர அவர்களின் எல்லையை தாண்டிதான் போகிறார்கள். ஆந்திராவில் போதை பொருள் வைத்திருந்ததாக பலபேர் மீது கண் வைத்துள்ளது போலீஸ். நம்ம ஊரிலும் இனி அப்படித்தான் நடக்கும் போல தெரிகிறது., குடி, உன் குடியை கெடுத்தா பரவாயில்ல. சும்மா நடந்து போறவன் குடியையும் கெடுக்குதேடா… என்று அடிவயிறு எரிய ஆத்திரப்பட விடுகிறார்கள் காஸ்ட்லி குடிகார்கள். இவர்கள் தினந்தோறும் ஒரு ஆக்சிடென்ட் செய்து, யாராவது ஒருவரின் குடும்பத்தை நட்டாற்றில் விடுகிறார்கள். நல்லவேளையாக ஜெய் மோதியது பாலத்தில். அதுவே ஒரு நபராக இருந்திருந்தால்?

நன்றாக முட்ட முட்ட குடித்துவிட்டு நள்ளிரவில் கார் ஓட்டிய நடிகர் ஜெய், அடையாறு பாலத்தில் மோதி காரை விபத்துக்குள்ளாக்கியிருக்கிறார். அவர் மீது வழக்கு தொடர்ந்த போலீஸ், ஜெய் தரத் தயாராக இருந்த லஞ்சத்தையும் மீறி அவரை கைது செய்து ஜாமீனில் விடுவித்திருக்கிறது. அவரது சைலென்சையும் ரத்து செய்ய பரிந்துரைத்திருக்கிறது. மேலும் சில பல வழக்குகளையும் போடுவதாக செய்தி வருகிறது.

இவர் மட்டுமா சிக்குனார் இவர் கூட சேர்ந்து இனொரு மகா குடிகாரரும் சிக்கினார். ஜெய்யுடன் காரில் பயணித்த அந்த இன்னொரு நல்லவர் நடிகர் பிரேம்ஜி. குடிப்பதை ஏதோ கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதைப் போல பெருமை பொங்க பேசுகிறவர்கள்தான் பிரேம்ஜியும் அவரது அண்ணன் வெங்கட்பிரபுவும். இந்த கெட்ட சேர்க்கை ஜெய்க்கு அசிங்கத்தை சேர்த்துக் கொடுத்ததில் வியப்பேயில்லை. இது தொடர்ந்தால் இனி அவர் எதிர்காலம் கேள்விக்குறிதான்.

இன்னும் பல நடிகர்கள் அனைத்து வார இறுதியிலும் இதேதான் வேலையாக வைத்துள்ளார்கள். இன்று ஜெய் சிக்கிக் கொண்டார். போலீஸ், பொறி வைத்து பிடித்தால் கோடம்பாக்கத்தில் பிரவுன்சுகர் அடிக்கிற ஹீரோக்களையும், ஏன்… சில ஹீரோயின்களையும் கூட வளைத்து விடலாம்! மூன்றெழுத்து ஹீரோ, நாலெழுத்து ஒல்லி இசையமைப்பாளர், நாலெழுத்து ஹீரோயின், அஞ்செழுத்து ஹீரோயின் என பலபேர் சிக்குவார்கள். விரைவில் அவர்கள் பிடிபட வாழ்த்துகிறோம்.

ஆனால் ஒன்று இவ்வளவு செலவு செய்து சரக்கடிக்கிற இந்த நல்ல குடிமக்கள், ஒரு பத்தாயிரம் செலவு செய்து ஒரு டிரைவரை பணிக்கு வைத்துக் கொள்வதில் ஏன் தயக்கம் காட்டுகிறார்களோ? இவர்களின் வண்டவாளம் தெரிந்துவிடும் என்று பயந்தோ என்னமோ.. உங்கள் சினிமா ப்ரோமோஷன் வேலைகளுக்கு அடுத்தவர்கள் உயிருடன் விளையாடுவது எந்த விதத்தில் நியாயம் என்றே தெரியவில்லை.

கங்கை அமரன் சார் அரசியலுக்கு வரதுக்கு முன்னாடி கொஞ்சம் உங்கள் வீட்டையும் பார்த்துட்டு வாங்க.. அவன் அவன் இருக்கற காசுல நல்லது பண்ணி ஆட்சிய புடிக்க பார்த்துட்டு இருக்கானுங்க. நீங்க என்னன்னா இன்னும் குடிச்சிட்டு சுத்திட்டு இருக்கீங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top