தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு விதித்துள்ள தடையை நிரந்தரமாக நீக்கக்கோரி தொடர்ந்து 7து நாளாக தமிழகம் முழுவதும் மாணவர்களும், இளைஞர்களும், பெண்களும் குடும்பம் குடும்பமாக பெரும் திரளாக திரண்டு அறவழிப் போராட்டத்தை நடத்திவருகின்றனர்.

சென்னை மெரீனா, அலங்காநல்லூர் போராட்டக்களமும் முக்கிய இடமாக கருதப்படுகிறது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் ஆரம்பித்த சென்னை மெரீனா போராட்டக்களத்தில் பல லட்சம் பேர்களை குவித்து வைத்துள்ளது.

இந்நிலையில், மெரீனா போராட்டக்களத்தில் அமைதியாக களைந்து செல்லுமாறு இன்று அதிகாலையில் பேச்சுவார்த்தை நடத்தினர். மாணவர்களும் இளைஞர்களும் மறுப்பு தெரிவித்ததால், குண்டுகட்டாக அவர்களை அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் சென்னை மெரீனா போராட்டக்களத்திலும், மாநிலம் முழுவதிலும் உள்ள போராட்டக்காரர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.