தமிழகத்தின் புகழ்பெற்ற சுற்றுலா தளமான குற்றாலத்தில் பெண்கள் குளிக்கும் பகுதியில் ஆண் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருப்பதால் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை சீசனின் போது குற்றாலத்திற்கு 25 லட்சம் முதல் 30 லட்சம் வரை சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். அதனால் பெரும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் காவல் துறையினர் திணறுவார்கள். தற்போது மேற்குத்தொடர்ச்சி மலையான தென்காசி, செங்கோட்டை, குற்றாலம் ஆகிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதனால் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் சீசனுக்கு முன்பே சுற்றுலா பயணிகள் அதிகமாக குற்றால அருவிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

அதிகம் படித்தவை:  தீபாவளி வாழ்த்துக்களுடன் தாறுமாறு மாஸ் கெட் அப்பில் வெளியானது சூர்யாவின் NGK பட போஸ்டர்.

இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்த கூடுதலாக ஆண் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். குறைந்த அளவில் பெண் காவலர்களை பணியில் அமர்த்திவிட்டு ஆண்களையே அதிகம் பணியமர்த்தி உள்ளார்கள். குறிப்பாக பெண்கள் குளிக்கும் பகுதிகளில் ஆண் காவலர்களை பணியமர்த்தி உள்ளதால் பெண் சுற்றுலா பயணிகள் பெரும் இன்னலுக்கு உள்ளாவதாக கூறப்படுகிறது.