தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து கலக்கியவர் மாஸ்டர் பரத் இவர் இதுவரை 50 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் இவர் படத்தில் நடிப்பது மட்டும் இல்லாமல் சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் மாஸ்டர் பரத் சிம்புவின் சிலம்பாட்டம், தனுஷின் உத்தமபுத்திரன், விஜய்யுடன் போக்கிரி என பல படத்தில் நடித்துள்ளார் இவர் நகைச்சுவையாக நடிப்பதில் திறமை மிக்கவர், இப்படி குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர் தெலுங்கு சினிமாவில் ஹீரோவிற்கு நண்பனாக நடித்து வருகிறார்.

அதிகம் படித்தவை:  தூத்துக்குடி சம்பவம் குறித்து வாய் திறக்காத தல, தளபதி... ஏமாற்றத்தில் ரசிகர்கள்

இவர் தனது படிப்பை முடித்து விட்டார் தற்பொழுது ஆளே அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார், மீண்டும் தற்பொழுது நடிப்பதற்கு வந்துள்ளார், அல்லுசிரிஷ் நடிக்கும் ABCD படத்தில் அவருக்கு நண்பனாக நடித்து வருகிறார், இந்த நிலையில் இவரின் புதிய புகைப்படம் ஓன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது .

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இது பரத் தானா கொழுக்கு மொழுக்குன்னு இருந்த இவர் இவ்வளவு அழக ஆகிட்டார் என ஷாக் ஆகியுள்ளார்கள்.