Tamil Cinema News | சினிமா செய்திகள்
இந்த படத்துடன் ஒப்பிடும் பொழுது போக்கிரி படம் பிளாப் தான் ராம் கோபால் வர்மா சர்ச்சை கருத்து.!
போக்கிரி 2007 ஆம் ஆண்டு திரைப்படமாகும்.தெலுங்கில் மகேஷ் பாபு நடித்து ஹிட் ஆன கதையை தான் தமிழில் பிரபுதேவா ரீமேக் செய்தார். முக்கிய கதாபாத்திரமாக விஜய், அசின் , பிரகாஷ் ராஜ், நெப்போலியன், நாசர், வடிவேலு ஆகியோர் நடித்தார்கள்.
இத்திரைப்படம் ஜனவரி 14 ஆம் தேதி பொங்கல் தினத்தன்று வெளியிடப்பட்டது. இப்படம் 2005-ல் வெளியான திருப்பாச்சி பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது.
மேலும் இந்தபடம் விஜய்யின் திரையுலக வரலாற்றில் ஒரு மைல் கல்லாக அமைத்தது குறிப்பிடத்தக்கது. விஜய் தனது திறமையை வெளிப்படுத்தியது போல வடிவேலு தனது நகைச்சுவை நடிப்பு திறமையை வெளிப்படுத்தியது மேலும் இப்படத்திற்கு சிறப்பாக அமைந்தது.தமிழில் மாபெரும் ஹிட் ஆனது போக்கிரி படம்.
தெலுங்கு படமான போக்கிரி படத்தை இயக்கிய பூரி ஜெகன்நாத் தற்பொழுது தன் சொந்த மகனை ஹீரோவாக அறிமுகபடுத்தும் மெஹபூபா என்ற படத்தை இயக்கி வருகிறார்.
அந்த படத்தில் ஒரு சில காட்ச்சியை அவர் ராம் கோபால் வர்மாவுக்கு காட்டியுள்ளார். அதனை பார்த்து வியந்த ராம் கோபால் வர்மா மகேஷ் பாபு போக்கிரி படத்தை இந்த படத்தோடு ஒப்பிட்டால் மகேஷ் பாபு போக்கிரி படம் பிளாப் என தனது கருத்தை டிவிட்டரில் தெரிவித்துள்ளார் ராம் கோபால் வர்மா.
I just saw parts of @purijagan ‘s Mehbooba and I strongly feel @urstrulyMahesh ‘s Pokiri is a flop in comparison ..Could be becos of his love for his son that he made this film so fucking special ..Whatever reason it’s FUCKING looking EPIC ?
— Ram Gopal Varma (@RGVzoomin) January 21, 2018
