Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்தது சர்கார் படத்தில் இல்லையாம்.! இதோ அதிகாரபூர்வ அறிவிப்பு.!
விஜய் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருப்பது சர்காரின் பாடலுக்காக தான் , இந்த படத்தில் இருந்து வரும் முதல் பாடல் என்பதால் பாடல் எப்படி இருக்கும் எந்த அளவுக்கு இருக்கும் என ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்த்து வருகிறார்கள்.

vijay-sarkar
இந்த நிலையில் வருகிற திங்கட்கிழமை செப்டம்பர் 24-ஆம் தேதி சிங்கிள் டிராக் வெளியாக இருக்கிறது, இதை அனைவரும் அறிந்ததே, இந்த நிலையில் பாடலாசிரியர் விவேக் ரசிகர்களுடன் டுவிட்டரில் உரையாடியுள்ளார் அப்போது அவர் சொன்ன தகவல் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
விஜய் ரசிகர்கள் அனைவரும் மெர்சல் ஆளப்போறான் தமிழன் என்ற பாடலை போல் சர்கார் படத்திலும் இருக்கும் என அதிகமாக எதிர்பார்த்து இருக்கிறார்கள் ஆனால் விவேக் தனது டுவிட்டரில் வேற ஒரு அறிவிப்பை கூறியுள்ளார் ஆளப்போறான் தமிழன் பாடல் போல் சர்க்காரில் இருக்காது, இது வேறு விதமான படம் அதே போல் வேற கதை அதனால் அதற்கு தகுந்தாற் போல் தான் பாடலை எழுதி உள்ளேன் இந்த பாடல் உங்களுக்கு பிடிக்கிறதா என்று தெரிந்து கொள்ள மிகவும் ஆவலாக காத்திருக்கிறேன்
There Won’t b an Aalaporaan Thamizhan in Sarkar .. We didn’t work towards that too. This is a different film, different storyline with different needs. I tried to do justice. I will wait n c how far u like my work ? https://t.co/xcup4z5nAl
— Vivek Lyricist (@Lyricist_Vivek) September 22, 2018
