Politics | அரசியல்
7/7 படுதோல்வியை சந்தித்த பாமக ஏந்த இடங்களில்..? அதிமுக மற்றும் பாமக கூட்டணிக்கு மக்கள் வைத்த ஆப்பு
Published on

நேற்று மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளிவந்தன. அதில் தமிழ்நாட்டில் அதிமுக, திமுக, பாமக ,நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மையம் போன்ற பல கட்சிகள் போட்டியிட்டனர். அதிமுகவுடன் கூட்டணி அமைத்த பாமக எந்த எந்த தொகுதியில் யார் வெற்றி பெற்றுள்ளனர் என்று பார்ப்போம்.
அதிமுகவுடன் கூட்டணி அமைத்த பாமக தர்மபுரி, விழுப்புரம் ,கடலூர் ,அரக்கோணம், மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், திண்டுக்கல் ஆகிய 7 இடங்களில் படுதோல்வி அடைந்து மண்ணை கவ்வியது. இது என்ன ஒரு ஆச்சரியம் என்றால் பாமக போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியடைந்தது.
மேலும் பாமகவின் முக்கிய வேட்பாளரான அன்புமணி தர்மபுரி மாவட்டத்தில் தோல்வியடைந்தார். இது பா.ம.க தொண்டர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

pmk
