ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு வரலாற்றில் பேசப்படும் என்று, பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

தலைநகர் டெல்லியில் இன்று நிதி ஆயோக் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மத்திய அமைச்சர், மாநில முதலமைச்சர்கள் மற்றும் நிதியமைச்சக அதிகாரிகள் என அனைவரும் பங்கேற்றனர்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, பெரும் பொருளாதார வளர்ச்சியை தற்போது இந்தியா எட்டியுள்ளதாகக் குறிப்பிட்டார். கடந்த சில ஆண்டுகளில், நாட்டின் பொருளாதாரம் வெகுவாக மேம்பட்டுள்ளதற்கான புள்ளிவிவர ஆதாரங்களையும் அப்போது அவர் மேற்கோள் காட்டினார்.

அதிகம் படித்தவை:  அஜித்திடம் கற்று கொள்ளுங்கள் இளைஞ்சர்களே..!பெண்களிடம் எப்படி நடந்து கொள்வதென்று.

கடந்த 2014ம் ஆண்டில் இருந்ததைவிட, தற்போது மாநிலங்களுக்கு, மத்திய அரசு வழங்கும் நிதி ஒதுக்கீட்டின் அளவு 40% வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக, பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

மேலும், இந்தியப் பொருளாதாரம் முன்னெப்போதும் இல்லாத புதிய உச்சத்தை எட்டும் வகையில் வேகமாக நடைபோட்டு வருவதாகவும், அதற்காகவே, ஜிஎஸ்டி வரிவிதிப்பை அமல்படுத்த உள்ளதாகவும் மோடி தெரிவித்தார்.

அதிகம் படித்தவை:  பிரபல நடிகருடன் ஜோடி சேர மறுத்த கீர்த்தி சுரேஷ்

ஜிஎஸ்டி வரிவிதிப்பு அமலுக்கு வரும்போது, நாடு முழுவதும் அனைத்துவிதமான தொழில்களுக்கும், ஏறக்குறைய சரிசமமான வரி விதிக்கப்படும். அத்துடன், தொழில்துறையில் புதிய மாற்றம் ஏற்படும். பொருளாதார வளர்ச்சி மிக விரைவானதாக மாறும். இந்த பொருளாதார மாற்றம், இந்திய வரலாற்றில் முக்கியமான மைல்கல் சாதனையாக இருக்கும் என்றும், பிரதமர் நரேந்திர மோடி அப்போது, பெருமிதத்துடன் சுட்டிக்காட்டினார்.