இன்று காலை 10 மணியளவில் பிளஸ் டூ அரசுத் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன.

தமிழகத்தில் மொத்தம் 9 லட்சம் மாணவ, மாணவிகள் பிளஸ் டூ தேர்வுகளை எழுதியிருந்தனர். இந்த தேர்வுகளுக்கான முடிவுகள் மே 12-ஆம் தேதி வெளியிடப்படும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி இன்று காலை 10 மணியளவில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன.

அதிகம் படித்தவை:  விசுவாசம் படம் எப்பொழுது ரிலீஸ் முதல் முறையாக அறிவித்தார் சிவா.! ரசிகர்கள் கொண்டாட்டத்தில்.

தேர்வு முடிவுகள் வெளியான பத்து நிமிடங்களுக்குள், பிளஸ் டூ தேர்வு எழுதிய மாணவர்களின் செல்போன் எண்களுக்கு தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த முறை மாநில அளவில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவ,மாணவியரின் பெயர்கள் அறிவிக்கப்படாது எனவும் அதிகபட்சமாக எடுக்கப்பட்ட மதிப்பெண்கள் குறித்து மட்டுமே குறிப்பிடப்படும் எனவும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் படித்தவை:  2016ல் வந்த படங்களில் வெற்றி , தோல்வி படங்கள் எது? ஒரு பார்வை

இணையதளம் வழியாக தேர்வு முடிவுகளை பார்க்கும் போது எந்த வித இடையூறும் ஏற்படாத வண்ணம், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். பிளஸ் டூ தேர்வு முடிவுகளை தொடர்ந்து, வரும் 19-ஆம் தேதி பத்தாம் வகுப்பு அரசுத் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.