Sports | விளையாட்டு
சிஎஸ்கே பட்ட அசிங்கத்துக்கு காரணம் இதுதான்.. புலம்பி தள்ளும் பிளெமிங்!
உலக அளவில் டி 20 தொடர்களின் சிறந்த அணியாக திகழ்ந்தது தான் சிஎஸ்கே. ஆனால் தற்போது சிஎஸ்கே அணி படுதோல்வியடைந்துள்ளது உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது.
அதாவது நேற்று முன்தினம் (அக்- 23) சிஎஸ்கே அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதிக்கொண்டதில் சென்னை அணி படுதோல்வியை சந்தித்தது. இதனால் சென்னை அணி நடப்பு ஐபிஎல் டி20 தொடருக்கான ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறியது.
இந்த நிலையில் சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்மிங், சிஎஸ்கே அணியின் தொடர் தோல்விகளுக்கான காரணத்தை பற்றி வேதனையுடன் தெரிவித்திருக்கிறார்.
அதாவது சமிபத்தில் நடந்த போட்டியில் சென்னை அணி 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆனால் மும்பை அணியோ 12.2 ஓவர்களிலேயே வெற்றியைப் பெற்றது. மேலும் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறிய முதல் அணி சிஎஸ்கே தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எனவே, இந்த தோல்வியை குறித்து பேசிய பிளம்மிங், பவர்ப்ளே ஓவர்களில் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தது தான் மும்பை அணியுடனான படுதோல்விக்கு காரணம் என்றும், இந்தத் தொடரில் சிஎஸ்கே வெற்றி பெறுவதற்காக எடுத்த அனைத்து முயற்சிகளும் தவறாக முடிந்தது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் இதனை கேட்ட சிஎஸ்கே ரசிகர்கள், ‘மைதானத்தில விளையாடாம இப்ப வந்து ஆளாளுக்கு காரணம் சொல்லிக்கிட்டு இருக்கீங்களா’ என்று கடுப்பாகி உள்ளனர்.

csk ipl
