சகாயம் சார் உங்களுக்கு மாணவன் சில கேள்விகளை எழுப்பி விட்டுப் போய் இருக்கிறான்.

மெரீனாப் புரட்சியில் லட்சக்கணக்கில் மாணவர்கள் கூடி போராடிய போதும் அவர்களுக்கு ஒரு தலைமை இல்லாமல் போனது எவ்வளவு பின்னடைவு.

யார் யாரோ மைக் பிடித்தார்கள். லாரன்ஸ் அவர்களது ஆட்கள் செய்த ஆக்கிரமிப்பு ரொம்பவே அதிகம்.

நான்கு நாட்கள் நாங்கள் இருக்கிறோம் என்று காட்டிக் கொண்ட திரை பிரபலங்கள் ஐந்தாம் நாள் ஏதோவொரு காரணங்கள் சொல்லிக் கொண்டு எஸ்கேப் ஆகிவிட்டனர்.

மாணவர்கள் திகைத்துப் போய் விட்டனர். ஒரு பாதி க்ரூப் கிளம்பிச் சென்று விட்டது. மீதமுள்ள க்ரூப் தடியடி வாங்கி அவமானப்பட்டு கிளம்பியது.

இங்கு தான் நீங்கள் உள்ளே வருகின்றீர்கள். உங்களைப் போன்று ஒரு தலைமை இருந்திருந்தால், இது போன்ற குழப்பங்கள் வந்திருக்காது.

இரண்டு வருடமாக மாணவர்கள், இளைஞர்கள் பொதுமக்கள் உங்களை அழைத்துக் கொண்டே இருக்கிறார்கள்.

ஆனால், நீங்கள் தான் எந்தப் பதிலும் சொல்வதே இல்லை. மாணவ சக்தி முழுக்க உங்கள் பின்னால் அணி திரள தயாராக இருக்கும் போது ஏன் பயம் சார்..?

இன்னும் எதற்கு அமைதி? மாணவன் திரண்டால் என்ன நடக்கும் என்பதை உங்கள் தமிழ் மாணவன் உலகிற்கே காட்டி விட்டானே இன்னும் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?

அல்லது அரசியலே வேண்டாம் என்று தீர்மானமே செய்துவிட்டீர்களா?எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள் மாணவன் இன்னும் உங்களை நம்புகிறான்.