Connect with us
Cinemapettai

Cinemapettai

என் அம்மாவுக்காக பிராத்தனை செய்யுங்கள்- பிரபல நடிகரின் மகன் வேண்டுகோள்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

என் அம்மாவுக்காக பிராத்தனை செய்யுங்கள்- பிரபல நடிகரின் மகன் வேண்டுகோள்

கர்நாடக திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர் மறைந்த ராஜ்குமார். இவரின் மனைவி பர்வதம்மா ஒரு வாரமாக உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த இவர் தற்போது கல்லீரல், நுரையீரல் மற்றும் சிறுநீரகக் கோளாறுகளுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

இவரின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் கூறுகையில், பார்வதி அம்மா உடல் நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது, கண்களைத் திறந்து பார்க்கிறார், வாய் மொழி கட்டளைகளுக்குப் பதில் சொல்கிறார் என்றனர்.

இந்த நிலையில் பர்வதம்மாவின் மகன் ராகவேந்திரா ராஜ்குமார் பத்திரிக்கையாளர்களிடம் பேசுகையில், என் அம்மா உடல்நிலை குறித்து வரும் வதந்திகளை நம்பாதீர்கள். அதற்கு பதிலாக என் அம்மாவுக்காக பிரார்த்தனை செய்துகொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top