பவர்பாண்டி படத்தின் வெற்றி மகிழ்ச்சியில் இருக்கிறார் தனுஷ். அதேசமயம் வருத்தத்தை தரும் வகையில் சொந்த விஷயத்தில் சில பிரச்சனைகள் இருந்து வந்தது. அதாவது அவர் யாருடைய மகன் என்று நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது.

அண்மையில் தான் அந்த வழக்கும் ஒரு முடிவுக்கு வந்தது. இந்நிலையில் இந்த பிரச்சனைகள் குறித்து தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜா பேசும்போது, இந்த வழக்கில் சுத்தமாக உண்மை இல்லை, அதோடு சட்டம் தன் கடமையை செய்யும் என்பது எங்களுக்கு தெரியும்.

அதிகம் படித்தவை:  சிம்பு -தனுஷ் படங்களில் நடித்த நடிகை நடிப்புக்கு முழுக்கு!

அடுத்தவர்களின் பொருளுக்கு ஆசைப்படுவதற்கு ஒரு அளவு உண்டு, அவர்களின் ஆசை எல்லை கடந்தது. தனுஷ் நீதிமன்றத்தில் நின்றதை பார்த்தபோது கவலையாக இருந்தது. எந்த தப்பும் செய்யாமல் தனுஷ் இதை சந்திக்க வேண்டியிருந்தது.

அதிகம் படித்தவை:  ரஜினி ரஞ்சித் படத்தின் கதை! பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த தனுஷ்!

இந்த வழக்கு விஷயத்தில் அவர்களை மன்னித்துவிடுங்கள் என்று தனுஷ் கூறினார். அதையே தான் தற்போதும் கூறுகிறார் என்றார்.