rakul-preet-singh

ராகுல் ப்ரீத் சிங் பதினெட்டு வயசிலயே மாடலிங் பண்ண வந்த பொண்ணு . அதைப் பார்த்திட்டு 2009ல் வந்த வாய்ப்பு தான் `கில்லி’என்ற கன்னடப்படம் . அது நம்ம `7ஜி ரெயின்போ காலனி’ படத்துடைய ரீமேக். இவர் வேண்டாம் விருப்பம் இல்லை என்று சொல்லிவிட்டார். ஆனால் அந்த படக்குழு,`7ஜி ரெயின்போ காலனி’ பட சீடி அனுப்பி பார்க்க வைத்து சம்மதம் வாங்கியுள்ளனர். ஏன் சினிமால வர்ற காசை பாக்கெட் மணியா வெச்சுக்கக் கூடாது என்று நினைத்து தான் அந்தப்படத்தை நடித்துக்கொடுத்தாராம் ராகுல் ப்ரீத்.

rakul-preet-singh

பின்னர் இவர் 2011 ஆம் ஆண்டில் நடந்த பெமினா மிஸ் இந்தியா போட்டியில் கலந்துக்கொண்டு ஐந்தாம் இடம் பிடித்தார்.

அதன் பின் தமிழில் “தடையற தாக்க”, “புத்தகம்” போன்ற படங்களில் நடித்தார். எனினும் அந்த சமயம் தமிழில் பெரிதாக எடு படாத இவர் தெலுங்கில் பிஸி ஆனார். அங்கு இவர் நடித்த படங்கள் சூப்பர் ஹிட் ஆக, முன்னணி நாயகி ஆனார். பின்னர் பல வருடங்கள் கழித்து முருகதாஸின் ஸ்பைடர் படம் தான் தமிழில் இவருக்கு ரீ என்ட்ரி. ‘ஸ்பைடர்’ படத்துக்கு பிறகு ரகுல் பிரீத்திசிங் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் நடித்தார். இதில் அவருக்கு நிறைய ரசிகர்கள் கிடைத்துள்ளனர் . தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்பு தற்பொழுது குவியத் தொடங்கி உள்ளது.

இந்நிலையில் அன்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ரிப்போர்ட்டர் ஒருவர் “நயன்தாராவை போல் முக்கிய இடம் பிடிப்பீர்களா” என்று எழுப்பிய கேள்விக்கு ?

அவர் தெரிவித்த பதில் ..

“நயன்தாரா சீனியர் நடிகை. அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்துதான் சிறந்த நடிகை என்பதை நிரூபித்து வருகிறார். நான் இன்னும் அவரைப் போன்ற வேடங்களில் நடிக்கவில்லை. என்றாலும், அவரைப்போல கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களில் நடிக்க விரும்புகிறேன். மற்றபடி நயன்தாரா இடத்தை பிடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இல்லை.

நயன்தாராவுடன் ஒப்பிடும் அளவுக்கு இன்னும் வளரவில்லை. நான் இப்போது வளர்ந்து கொண்டிருக்கும் ஒரு நடிகை. என் திறமையை இன்னும் வளர்த்துக் கொள்ள முடிந்த அளவு முயற்சிகளை செய்வேன்.” என்று தன்னடக்கமா பதில் சொல்லியுள்ளார் ராகுல் ப்ரீத்.