Connect with us
Cinemapettai

Cinemapettai

சென்னையில் முதல் டெஸ்ட் போட்டி! இந்திய டீம்மில் நம்ம செல்ல பிள்ளைக்கு வாய்ப்பு

Sports | விளையாட்டு

சென்னையில் முதல் டெஸ்ட் போட்டி! இந்திய டீம்மில் நம்ம செல்ல பிள்ளைக்கு வாய்ப்பு

சமீபத்தில் நடந்து முடிந்த இந்த ஆஸ்திரேலிய தொடரில் பல ஏற்ற இறக்கங்களை நாம் பார்த்தோம். ஒரு நாள், டி 20 போட்டிகளை விட டெஸ்ட் போட்டிகள் அதிக பரபரப்பாக சென்றது. பல முன்னணி வீரர்கள் இல்லாமல், ரஹானே தலைமயில் கோப்பையை வென்றது சூப்பர் தான். எனினும் அந்த தொடரின் ஜோர் அடங்குவதுக்கு முன்னதாக அடுத்த தொடர் இங்கிலாந்துடன் இன்று துவங்கிவிட்டது.

நம் சென்னை சேப்பாக்கில் தான். கோலி மீண்டும் திரும்புகிறார் கேப்டனாக. நமது பேட்டிங் கிட்டத்தட்ட முடிவான ஒன்று தான், எனினும் விக்கெட் கீப்பர் பண்ட் அல்லது சாஹா யாராக இருக்கும் என்பது பலரது கேள்வியாக இருந்தது.

அதே போல பும்ராவுடன் சீனியர் வீரர் இஷாந்த் அணிக்கு திரும்புவதும் உறுதியாக தெரிந்தது. அனால் அஸ்வின் அவர்களுடன் ஆடப்போகும் ஸ்பின்னர்கள் யார் என்பதே பலரது கேள்வி. ஜடேஜாவுக்கு மாற்றாக அக்சர் படேல் இடம் பெறுவார் என எதிர்பார்த்த நேரத்தில் அவருக்கு காயம் ஏற்பட்டது. குல்தீப்புக்கு தான் வாய்ப்பு என நினைத்த பலருக்கு ஏமாற்றமே.

டாஸ் இங்கிலாந்து வென்று பேட்டிங் தேர்ந்தெடுத்தது. இந்திய டீம்மில் ஆல் ரௌண்டார் ரோலில் வாஷிங்க்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் சபாஷ் நதீம் விளையாடுகிறார் .

washington sundar

India (Playing XI): Rohit Sharma, Shubman Gill, Cheteshwar Pujara, Virat Kohli(c), Ajinkya Rahane, Rishabh Pant(wk), Washington Sundar, Ravichandran Ashwin, Ishant Sharma, Jasprit Bumrah, Shahbaz Nadeem

இங்கிலாந்து டீம்மில் ஜாக் க்ரலி பதிலாக லாரன்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். பிராட், பேரஸ்ட்டோ அவர்களுக்கு இடம் இல்லை.

England (Playing XI): Rory Burns, Dominic Sibley, Daniel Lawrence, Joe Root(c), Ben Stokes, Ollie Pope, Jos Buttler(w), Dominic Bess, Jofra Archer, Jack Leach, James Anderson

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top