fbpx
Connect with us

Cinemapettai

சர்வதேச கிரிக்கெட்டில் ஜாம்பவானாக திகழ்ந்தும், ஒரு உலகக்கோப்பை போட்டியிலும் விளையாடாத வீரர்கள். டாப் 5.

Sports | விளையாட்டு

சர்வதேச கிரிக்கெட்டில் ஜாம்பவானாக திகழ்ந்தும், ஒரு உலகக்கோப்பை போட்டியிலும் விளையாடாத வீரர்கள். டாப் 5.

உலக கோப்பையில் பங்கேற்காத சில வீரர்களை பற்றிய தொகுப்பே இந்த பதிவு.

Team India 2011 World Cup Winners

கிரிக்கெட் விளையாட ஆரம்பிக்கும் சுப்பன், குப்பன் என்று அனைவரின் கனவும் தன் நாட்டின் அணிக்காக விளையாட வேண்டும் என்பது தான். அதே போல் தன் நாட்டிற்க்காக உலக கோப்பையை ஜெயிப்பதும் ஒரு சராசரி கிரிக்கெட் வீரரின் ஆசை தான். தங்கள் நாட்டிற்க்காக பல வருடம் ஒரு நாள் போட்டி, மற்றும் டெஸ்ட் விளையாடி யும் உலக கோப்பைக்கான தங்கள் நாட்டின் அணியின் இடம் கிடைக்காத வீரர்களின் பட்டியல் ..

அலிஸ்டர் குக்

Alastair Cook

இங்கிலாந்தின் டெஸ்ட் கிரிக்கெட்டின் முகம் என்று தான் சொல்ல வேண்டும். இடது கை துவக்க ஆட்டக்காரர். 11000 டெஸ்ட் ரன் களுக்கு மேல் எடுத்துள்ளார். 92 ஒரு நாள் போட்டிகள் விளையாடியுள்ளார், அதில் 69 போட்டிகளில் அணியின் கேப்டன் வேறு. எனினும் இவர் எந்த உலகக் கோப்பையும் விளையாட வில்லை என்பது தான் ஆச்சிர்யமான உண்மை.

இன்றும் டெஸ்ட் போட்டிகளில் திறன் பட விளையாடி வருகிறார்.இவர் கடைசியாக ஒரு நாள் போட்டி விளையாடியது 2014 இல். நம் லிஸ்டில் உள்ளவர்களில் இன்றும் கிரிக்கெட் விளையாடுவது இவர் மட்டுமே. இருந்தாலும் உலகக்கோப்பை என்பது வெறும் கனவாகவே போய்விட்டது இவருக்கு.

வி வி எஸ் லட்சுமண்

ஒரு காலத்தில் இந்தியாவின் பான்டஸ்டிக் 4 ல் சச்சின், கங்குலி, ட்ராவிடுடன் ஜோடி போட்டவர். இந்தியாவிற்க்காக 134 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8781 ரன்கள் எடுத்தவர். கொல்கத்தாவில் ட்ராவிடுடன் ஜோடி சேர்ந்து இவர் அடித்த 281 தான் இவரின் அதிகபட்ச ஸ்கோர். ஆஸ்திரேலிய அணிக்கு லட்சுமண் என்றுமே சிம்ம சொப்பனம் தான். இவர் இந்திய அணிக்காக 86 ஒரு நாள் போட்டிகள் ஆடினார்.

VVS Laxman & Rahul Dravid . Eden Gardens- Kolkatta

2003 ல் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற உலக கோப்பை போட்டியில் விளையாடும் அணியில் தேர்வாவர் என்று எதிர் பார்க்க பட்டபொழுது, கடைசி நேரத்தில் தினேஷ் மோங்கியாவுடம் தன் இடத்தை பறிகொடுத்தார்.

ஜஸ்டின் லாங்கர்

Justin Langer

14 வருடம் சர்வதேச கிரிக்கெட் ஆடினார். 105 டெஸ்ட் போட்டிகள், சராசரி 45 க்கு மேல். இவரும் மத்தியூ ஹேடன் அவர்களும் ஜோடி போட்டு அசத்தினார். எனினும் இவர் ஆஸ்திரேலியாவுக்காக விளையாடியது வெறும் 8 ஒரு நாள் போட்டியில் தான். அதிலும் அரை சத்தம் கூட அடிக்கவில்லை. இவரின் கடைசி ஒரு நாள் போட்டி 1997ல். அதன் பின் வெற்றிகரமாக கிட்ட தட்ட பத்து ஆண்டுகள் டெஸ்ட் போட்டிகளில் கலக்கினார்.

மத்தியூ ஹாக்கர்ட்

மீண்டும் ஒரு இங்கிலாந்து வீரர்.

Matthew Hoggard

இங்கிலாந்தின் டாப் 10 பந்துவீச்சாளர்கள் கணக்கு எடுத்தால் இவர் அதில் கட்டாயம் இடம் பிடிப்பார். 67 டெஸ்ட் மாட்ச் ஆடி 248 விக்கெட். ஆனால் இவர் 26 ஒரு நாள் போட்டிகள் தான் விளையாடினர். 2003 உலகக்கோப்பை அணியில் இடம் பிடித்தார், எனினும் ஒரு போட்டியில் கூட விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

கிறிஸ் மார்ட்டின்

chris martin

13 வருடங்கள் நியூஸிலாந்து அணிக்கு ஆடியவர். 71 டெஸ்ட் மாட்ச் 233 விக்கெட். பத்து முறை 5 விக்கெட்டுக்கு மேல் எடுத்துள்ள வீரர். இவர் வெறும் 20 ஐம்பது ஓவர் போட்டி தான் விளையாடினர் என்பது தான் அதில் பரிதாபம். 2007 உலக கோப்பை அணியில் டாரில் டூபஹி (Darell Tuffey) என்ற வீரர் காயம் அடைந்த காரணத்தால் அணியில் சேர்க்கப்பட்டார். எனினும் விளையாடும் வாய்ப்பு கிடைக்க வில்லை.

கிரிக்கெட்டை பொறுத்தவரை என்ன தான் திறமை இருந்தாலும் சந்தர்ப்ப சூழ்நிலை, லக்கையும் பொறுத்து ஒருவர் அடையும் நிலை வேறுபடுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top